3வது முறையாக பதவி ஏற்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவனத் தலைவர் இடிமுரசு இஸ்மாயில் அறிக்கை.
மூன்றாவது முறையாக பதவி ஏற்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவனத் தலைவர் இடிமுரசு இஸ்மாயில் அறிக்கை.
இந்திய திருநாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கட்சி 240 தொகுதிகள் பெற்று வெற்றிபெற்றது. இந்த நிலையில் ஆந்திரா சந்திரபாபு நாயுடு, மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் ஆதரவுடன் மற்றும் சில கட்சிகள், சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று நாளை ஆட்சியமைக்கிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்க்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசியல் சாசன சட்ட புத்தகத்தை வணங்கி கண்களில் ஒத்தியெடுத்த காட்சியை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சார்பில் பாராட்டுகிறேன்.
கடந்த காலங்களை போல மத வெறுப்பு செயல்பாடுகளை தவிர்த்து, புல்டோசர் கலாச்சாரங்களை விட்டுவிட்டு நியாயமான நீதிபரிபாலன ஆட்சியை கட்டமைத்து, அரசியல்சட்டம் வழங்கிய மதச்சார்பற்ற தன்மையை பாதுகாப்பதோடு தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கி சிறப்பான ஆட்சி நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க்கும் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் பராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.