இருசக்கர வாகனத்தில் படுத்தபடி ஆபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டி சாகசம் செய்த வாலிபர் மீது 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு
திருச்சி மாவட்டம்,
மணச்சநல்லூர் – துறையூர் சாலையில் நிவேஷ் (வயது19)
என்ற
இளைஞர் தனது ஆல்ட்டர் செய்யப்பட்ட டிவிஎஸ் 50. இரு சக்கர வாகனத்தில் படுத்தவாறு ஒட்டி சாகச பயணத்தில் ஈடுபட்டதுடன் அதை பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்த நிலையில்
பதைப்பதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சியை கண்ட பலரும் அதிர்ந்ததுடன் அந்த இளைஞர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து புலிவலம் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியதில் சாகசத்தில் ஈடுபட்டது புலி வலத்தைச் சேர்ந்த நிவேஷ் என தெரியவந்தது.
இதனையடுத்து நிவேஷ்
மீது புலிவலம்
போலீசார் ஐ.பி.சி.114, 278, 279,
286, 308,336, மற்றும் மோட்டார் வாகன சட்டம் 184 , 188 ஆகிய பிரிவு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து தலை மறைவாக உள்ள நிவேஷை தேடி வருகின்றனர்.