திருச்சியில் மாநகராட்சி பள்ளியை உடைத்து பணம் ,பொருட்கள் கொள்ளை.
நூலகம், மின்விசிறிகள், விளையாட்டு சாமான்களை சூறையாடி சென்ற கும்பல்.
திருச்சி நீதிமன்றம் எம்.ஜ.ஆர்.சிலை அருகில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் அம்சவல்லி பள்ளி ஆசிரியர்கள் நேற்று மாலை வழக்கம்போல் பள்ளியை பூட்டி விட்டு சென்று விட்டனர்.
பின் இன்று காலை வந்து பார்த்தபோது பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தலைமை ஆசிரியை அறையில் பீரோவில் வைத்திருந்த
ரூ. 25 ஆயிரம் பணத்தை திருடி விட்டனர். மேலும் அந்த கும்பல் பள்ளியில் இருந்த மின்விசிறிகள், விளையாட்டு சாமான்கள் அடித்து நொறுக்கி சூறையாடி சென்றனர். நூலகத்திலும் புத்தகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் முக்கியமான பொருள்கள் திருடு போயிருந்தது. உடனே இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை அம்சவல்லி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார் .
புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர் .பின்னர் கைரேகை நிபுணர்கள்,மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன .
இந்த சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த பள்ளி பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோத கும்பல்கள் மது அருந்துவதாகவும், சமூக சீர்கேடு செயல்கள் நடப்பதாகவும் பள்ளியின் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது .
அதன் விளைவாக சமூக விரோத கும்பல் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.