திருச்சி மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல். மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தொடங்கி வைத்தார் .
திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி கோடைகால நீர்மோர் பந்தல்களை திறந்து வைத்து – பொதுமக்களுக்கு பழ வகைகள் உடன் கூடிய நீர் மோர் வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தில் 104 டிகிரியை கடந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

வெயிலில் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க மாவட்டம் தோறும் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட, மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில், கோடைகால நீர் மோர் பந்தலை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி திறந்து வைத்தார்.
அப்போது, தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட பழ வகைகளும், இளநீர், ஜூஸ் வகைகள், எலுமிச்சை பழச்சாறு, நீர்மோர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக, துறையூர் நகரம், முசிறி நகரம் உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பூனாட்சி, முன்னாள் எம்எல்ஏக்கள் இந்திரா காந்தி, பரமேஸ்வரி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.