Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உக்கிரமா காளியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி தேரோட்டம் வரும் 23ஆம் தேதி விமர்சையாக நடைபெற உள்ளது.

0

 

திருச்சி தென்னூரில் அமைந்துள்ள
உக்கிர மாகாளியம்மன் சித்ரா பௌர்ணமி தேரோட்டம்
வருகிற 23ம் தேதி விமரிசையாக
நடைபெறுகிறது.

 

திருச்சி தென்னூரில்
பிரசித்தி பெற்ற உக்கிரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
முற்கால சோழ மன்னர்களின் குலதெய்வமாக, மகிஷாசுரமர்த்தினியின் வடிவமாக விளங்கி வருபவர் உக்கிர மாகாளியம்மன். மன்னராட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்த பின்னர் கிராம தேவதையாக மக்களை காத்து வருகிறார்.

இங்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்பாளை வழிபட்டு செல்கின்றனர். வேண்டினால் வேண்டும் வரம் தரும் உக்கிரமாகாளியம்மன்
கோவிலில் ஆண்டு தோறும் குட்டி குடித்தல் மற்றும் தேர்த் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும்.

இந்த நிலையில் உக்கிரமாகாளியம்மன் ஆணைப்படி சித்ரா பௌர்ணமியில் தேரோட்டம் நடத்த
முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் நன்கொடையாளர்கள் மூலமாக ரூ. 60 லட்சத்தில் கடந்தாண்டு
மரச் சிற்பத் தேர் வடிவமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
தற்போது அந்தப் பணிகள் வெற்றிகரமாக
நிறைவு பெற்றுள்ள நிலையில் வருகிற 23ம் தேதி காலை 11 மணிக்கு சித்ரா பௌர்ணமி அன்று
வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற உள்ளது.
தேரில் அம்பாள் வலம் வர உள்ளார்.

இது தொடர்பாக கோவில் நிர்வாகிகள் கூறும்போது:.
இந்த தேரானது அம்பாள் கர்ப்ப கிரகத்தில் எவ்வாறு அருள் புரிகிறாரோ
அதே போன்று ரதம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேரின் 4 சக்கரங்களும் 4 வேதங்களாக பாவிக்கப்படும்.
தேரின் வடம் அம்பாளின் இரு கரங்களாகவும்,
அம்பாளின் குழந்தைகளாகிய நாம் தாயின் கையைப் பற்றி நடப்பது போன்று தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனின் அருளை பக்தர்கள் பெற இருக்கிறார்கள்.

தேரின் சிறப்பு அம்சமாக சப்த கன்னிகள், சந்தன கருப்பண்ண சுவாமி ,மதுரை வீரன்,ஆஞ்சநேய சுவாமி, துர்க்கை,அஷ்ட காளியம்மன், சாம்புக மூர்த்தி,பள்ளிகொண்ட பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களின் மர சிற்பங்கள் தத்ரூபமாக
இடம்பெற்றுள்ளது.

முற்றிலும் இலுப்பை மரத்தில் கைதேர்ந்த சிற்பக் கலைஞர்களால் தேர் வடிவமைக்கப்பட்டுள்ள. தேரின் உயரம் 29 அடிகளாகும்.

தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை தெய்வீக மகா சபை மற்றும் தென்னூர் கிராமவாசிகள் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.