திருச்சி விமான நிலையம் அருகே விடுதியில் தங்கியிருந்த இளம் பெண் மாயம்.
திருவாரூர் மாவட்டம் கடத்தாநல்லூர் மாந்தோப்பூர் அக்ரஹார புது தெருவை சேர்ந்தவர் நசீர் அகமது .இவரது மனைவி சிராஜ் நிஷா (வயது 29) கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

தற்போது திருச்சி விமான நிலையம் பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி இருந்து ஆலிமா படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று விடுதியை விட்டு வெளியே சென்ற சிராஜ் நிஷா விடுதி திரும்பவில்லை.
இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.