Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தம்பி வீட்டில் ரூ.1கோடி சிக்கியது. ரூ.4 கோடி மிஸ்ஸிங். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய இருந்த பணம் ?

0

 

ஸ்ரீரங்கம் அருகிலுள்ள எட்டரை கிராம ஊராட்சித் தலைவர் திவ்யா வீட்டில் வருமான வரித்துறையினர் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி எட்டரை பகுதிக்கு விரைந்தனர்.அங்கே அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டில் பணம் இருப்பதாக தகவல் வந்தது.

எட்டரை ஊராட்சி மன்ற தலைவி திவ்யா வீட்டிற்குள் புகுந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது ஒரு பையில் ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் தகவல் கொடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.

எட்டரை கிராம ஊராட்சித் தலைவர் திவ்யா அன்பரசன் அதிமுகவை சேர்ந்தவர். மேலும் எதற்காக ஒரு கோடி ரூபாய் இவர் வீட்டில் வைத்துள்ளார் தேர்தல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய இருந்த பணமா என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதியின் அக்காள் மகள் தான் திவ்யா எனவும், இவரின் கணவர் அன்பரசன் பரஞ்சோதியின் தம்பி எனவும் கூறப்படுகிறது . இவரின் மூலம் நாமக்கல்லில் இருந்து 5 கோடி ரூபாய் கொண்டு வரப்பட்டதாகவும், அதில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே கிடைத்திருப்பதாகவும், எஞ்சிய 4 கோடி எங்கே எனவும் துருவி துருவி விசாராணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சியில் அதிமுக பிரமுகரிடம் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.