திருச்சி சமயபுரம் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவித்தார் திருச்சி கலெக்டர் . அதற்கு பதிலாக ….

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இதில் மாவட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அதனை ஈடு செய்ய ஜூன் எட்டாம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக இருக்கும் என்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.