Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு

0

திருச்சி, மதுரை ஆகிய மத்திய மாவட்டங்களிலும். வெப்ப அலை வீசும். நாளை வரை வெப்ப அலை வீசும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று நிலவரப்படி, தமிழகத்தின் உள்பகுதிகளில் உள்ள பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3-5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. வடக்கு உள் தமிழ்நாட்டின் பகுதிகளில் இயல்பை விட (சுமார் +4.5 டிகிரி செல்சியஸ்) அதிகமாக இருந்தன.

கரூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் வெப்பச் சலனம் நிலவுகிறது. அதிகபட்சமாக சேலத்தில் பதிவான வெப்பநிலை: 41.5°C (+3.9°C), அதைத் தொடர்ந்து திருப்பத்தூர்: 41.4°C (+4.2°C), கரூர் பரமத்தி: 41.0°C (+4.5°C), வேலூர்: 40.8°C ( +2.9°C), தருமபுரி: 40.7°C (+4.5°C), ஈரோடு: 40.7°C (+3.3°C) & திருச்சிராப்பள்ளி: 40.5°C (+3.1°C). திருத்தணி, நாமக்கல் பகுதிகளிலும் 40 டிகிரி செல்சியஸ் பதிவானது. மதுரை (நகரம் & விமான நிலையம்), சென்னை (MBK), கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூரில் 39°C முதல் 40°C வரை பதிவானது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோரப் பகுதிகளில் 34°C முதல் 37°C (இயல்புக்கு மேல் 2-3°C) மற்றும் மலைப் பகுதிகளில் 23°C முதல் 28°C வரை பதிவாகியுள்ளது.

சென்னை (MBK) சாதாரண அதிகபட்ச வெப்பநிலையான 39.6°C (+4.3°C)க்கும் அதிகமாகவும், NBK சாதாரண வெப்பநிலை 36.7°C (+2.4°C)க்கும் அதிகமாகவும் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் கரூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் வெப்ப அலை வீசும். 10ம் தேதி வரை இங்கே வெப்ப அலை வீசும்.

அதேபோல் தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் உச்சமாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது

இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பாலும் 37 – 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை சராசரியாக தமிழ்நாடு முழுக்க நிலவும் வாய்ப்புகள் உள்ளன.

கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.

சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.

சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த வருடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.

இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையான அவதிக்கு உள்ளாக தொடங்கி உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது. ஆனால் இதெல்லாம் வெறும் டீசர்தான். மார்ச் மாத இறுதியில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.