திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யும் நபர்களை அதிரடியாக கைது செய்து வரும் போலீசார் மொத்த வியாபாரி எஸ்விஆர்ஐ கண்டுகொள்ளாதது ஏன் ?
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி திருச்சி மாநகரில் அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது காவல்துறை ஆணையரின் உத்தரவின்படி திருச்சி போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பல்வேறு நபர்களையும் கைது செய்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
நேற்று கூட பிரபல லாட்டரி சீட்டு வியாபாரியை போலீசார் கைது செய்தனர் . திருச்சியில் சிறு வியாபாரி முதல் பெரிய வியாபாரி வரை கைது செய்து வரும் நிலையில்
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரியை சப்ளை செய்வது திருச்சி மூன்றெழுத்து தொழிலதிபர் எஸ்விஆர்.
தனது லாட்டரி தொழில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக தனது மகளை திருச்சி மூத்த அமைச்சரின் தயவில் திமுக மாமன்ற உறுப்பினர் ஆக்கி உள்ளார் .
திருச்சி தில்லை நகர் பத்தாவது கிராஸ் காந்திபுரத்தில் வைத்து பட்டுவாடா நடைபெறுகிறது .
திருச்சி மற்றும் தமிழகம் முழுவதும் லாட்டரி விற்பனை மற்றும் சப்ளை செய்து வரும் இவரை ஏன் போலீசார் கைது செய்யவில்லை . காவல்துறைக்கு பெரிய தொகையை மாமூலாக தருகிறாரா ? அல்லது அமைச்சருக்கு வேண்டியவர் என்பதால் போலீசார் கைது செய்யவில்லையா ? என நடுநிலையானவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் .
நாளை எஸ் வி ஆர் இன் கீழ் பணி புரியும் முகவர்களின் முழு விவரம் வெளிவரும் .