திருச்சியில் ரோல் பால் உலகக்கோப்பைக்கான பயிற்சி முகாம் மைதானத்தை பார்வையிட்ட ரோல்பால் விளையாட்டை தோற்றுவித்தவர், மற்றும் பெடரேஷன் பொறுப்பாளர்கள் ஆய்வு.
7வது ரோல் பால் உலகக் கோப்பைக்கான போட்டி.
திருச்சியில் பயிற்சி முகாம் மைதானத்தை பார்வையிட்ட ரோல் பால் தோற்றுவித்தவர்,
மற்றும் ரோல்பால் பெடரேஷன் பொறுப்பாளர்கள் ஆய்வு.
7வது ரோல் பால் உலக கோப்பைக்கான போட்டி அடுத்த வருடம் கென்யாவில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளது. இதையடுத்து இந்த போட்டிக்கான 17 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கான பயிற்சி முகாம் இந்தியாவில் 4 இடங்களில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி மதுரை, திண்டுக்கல் கோவை ஆகிய இடங்களில் பயிற்சி முகாமிற்கான இடத் தேர்வு நடந்து வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் கே.கே.நகரில் உள்ள சாய் ஜி ரோல்பால் மைதானத்தை தேர்வு செய்ய ரோல் பால் ஃபெடரேஷன் தலைவர் தபன் ஆச்சார்யா, சர்வதேச செயலாளர் ராஜ் தபாடி ஆகியோர் மாநில செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் அந்த மைதானத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தேசிய அளவில் மற்றும் பல்கலைக்கழக அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய செயலாளர் சுப்ரமணியன், மாநில துணைத்தலைவர்கள் பிரேம்நாத், சரவணன் மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், பயிற்சியாளர் காயத்ரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.