திருச்சி தில்லை நகர் விடுதியில் காதல் ஜோடி உல்லாசமாக இருந்ததை பார்த்த தோழிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரிடம் விசாரணை.
விடுதி அறையில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடி உல்லாசமாக இருந்ததை பார்த்த தோழிக்கு கொலை மிரட்டல்.
திருச்சி தஞ்சாவூர் ரோடு பால்பண்ணையை சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ் (வயது 30). இவரது மனைவியின் சகோதரி பாபிலோகார். இவர் தில்லை நகரில் உள்ள விடுதியில் தங்கி இருந்து அழகு கலை குறித்து அங்குள்ள பகுதியில் உள்ள நிறுவனத்தில் படித்து வந்தார்.
இந்த நிலையில் விடுதியில் இவரது பக்கத்து அறையில் இருந்த தோழியின் அறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தில்லை நகரைச் சேர்ந்த முகமது காசிம் (24) என்ற வாலிபரும், இவரது தோழியும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று முகமது காசிம் வகுப்புக்கு சென்ற பாபிலோகாரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி அங்கே பார்த்ததை யாரிடமும் சொல்ல கூடாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.