Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கமல் விஜய் படங்களில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம். திரை உலகினர் அதிர்ச்சி .

0

 

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானார்.

வடசென்னை, பிகில் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

பாலாஜி என்ற சொந்த பெயர் கொண்ட இவர், முதல் முறையாக 2000 – 2001 ம் ஆண்டு ஒளிபரப்பான சித்தி டிவி சீரியலில் டேனியல் என்ற கேரக்டரில் நடிகராக அறிமுகமானார். அதில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.இதையடுத்து டேனியல் என்ற பெயரை தனது பெயருடன் அடைமொழியாக இணைத்துக் கொண்டார்.தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் முரளியின் சித்தி மகன் தான் பாலாஜி. வயது 48. அவரது குடும்பத்தினர் திருமணம் செய்ய வற்புறுத்தியும் தனக்கு திருமணம் செட் ஆகாது எனக் கூறி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை .

இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டேனியல் பாலாஜி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

கமல்.விஜய் ஒன்று முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடித்த இந்த நடிகரின் திடீர் மறைவு திரை உலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.