Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தனக்கு டெண்டர் வழங்காத திருச்சி மேயரை கண்டித்து திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி தீப்பெட்டி இல்லாமல் பெட்ரோலை மட்டும் ஊற்றி கொண்டு தீக்குளிப்பு நாடகம். படமெடுத்த பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் .

0

 

திருச்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் முதலில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி நேற்று கழக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் பெருகிவரும் போதைப் பொருள் விற்பனையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம் குறித்து பேச முயன்ற போது திமுக கவுன்சிலர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததால் வெளிநடப்பு செய்தார் .

பின்னர் திருச்சியின் பிரபல ஒப்பந்ததாரரும் , காஜாமலை பகுதி செயலாளரும் 65 வது வார்டு கவுன்சிலருமான காஜாமலை விஜி தனது வார்டுணை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறப்பணித்து வருவதாகவும், எந்தப் பணியும் எந்த டெண்டரும் ஏன் தனக்கு கொடுக்கவில்லை எனக் கூறி மாநகராட்சி கூட்டத்தில் மேயரிடம் கேள்வி கேட்டார் . அதற்கு மேயர் அலட்சியமாக இது எல்லாம் பின்னால் பேசிக்கலாம் என அலட்சியமாக பதில் கூறியதால் கோபம் அடைந்த விஜி கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி ராஜினாமா கடிதத்தை ஆணையர் சரவணனிடம் கொடுத்துவிட்டு பின் வேகமாக தனது காருக்கு சென்று பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்வதாக கூறினார் . காரில் பெட்ரோல் இல்லாததால் வெளியே சென்று 4 லிட்டர் பெட்ரோல் மட்டும் வாங்கி கொண்டு வந்து மேயர் கார் முன்பு தனது தலையில் ஊற்றிக்கொண்டு தீப்பெட்டி. லைட்டர் எதுவும் இல்லாமல் கொளுத்திக் கொள்வதாக சீன் போட்டார் .. இதனை படம் எடுத்த பத்திரிகை நிருபர்களையும் தாக்கினார் .

 

பின்னர் சகா கவுன்சிலர்கள் அவரை சமாதானப்படுத்தி தண்ணீர் ஊற்றி கழுவி அனுப்பி வைத்தனர் .

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு டெண்டர் எதுவும் ஒதுக்கவில்லை என ஒப்பந்ததாரர் சங்கத் தலைவர் கோபாலை அடித்து நொறுக்கி விடுவேன் என தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு அவர் பேசிய வீடியோ வைரலாகியது .

மக்கள் பணிக்காக, சேவை செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கவுன்சிலர் தனக்கு டெண்டர் வழங்கப்படவில்லை என தீ குளிக்க முயன்ற சம்பவம் திமுக மீது வெறுப்பை உண்டாக்கியுள்ளது .

இந்த சம்பவங்களால் சாதாரண கூட்டம் பரபரப்பான கூட்டமாக மாறியது

Leave A Reply

Your email address will not be published.