Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் 15ம் தேதி பிரசித்தி பெற்ற உறையூர் வெக்காளியம்மன் பூச்சொரிதல் திருவிழா நடைபெறுகிறது

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா மாா்ச் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

TVK ad

இக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா மாா்ச் 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்குகிறது.

மேளதாளங்கள் முழங்க கோயில் நிா்வாகம் சாா்பில் கொண்டு வரப்பட்ட முதல் பூக்கூடையால், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். தொடா்ந்து, பக்தா்கள் கொண்டு வரும் பூக்களால், அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும்.

பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு, விஷேச அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் நடைபெறவுள்ளன. பக்தா்கள் சங்கத்தின் சாா்பில் பூக்களை ரதத்தில் எடுத்துச் சென்று அம்மனுக்கு பூஜை செய்யும் வைபவமும் நடைபெறும். இதேபோல, பல்வேறு அமைப்புகளும் பூக்கூடைகளையும், பூத்தட்டுகளையும் சுமந்து வந்து அம்மனுக்கு நோத்திக்கடன் செலுத்துவது வழக்கம். ஏற்பாடுகளை, கோயில் உதவி ஆணையா் ம. லட்சுமணன், செயல் அலுவலா் நா. சரவணன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள், ஊா்ப்பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.