தேசிய இளம்பிள்ளை வாத இலவச தடுப்பு மருந்து முகாமினை அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தொடங்கி வைத்தார் .
அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,
தேசிய இளம்பிள்ளை வாத இலவச தடுப்பு மருந்து முகாமை, சுப்ரமணியபுரத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும். 47 வார்டு மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் தொடங்கி வைத்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே தனது வார்டு முழுவதும் சொட்டு மருந்து அளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்
, ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று கட்டாயம் சொட்டு மருந்து வழங்க வேண்டும் எனக் கூறியும் போஸ்டர்கள் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.