Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் நடிகை விந்தியா சிறப்புரை

0

 

பாராளுமன்ற தேர்தல் மூலம்
அதிமுகவின் பலத்தை அண்ணாமலை புரிந்து கொள்ளும் காலம் வரும்.

திருச்சி பொதுக் கூட்டத்தில்
நடிகை விந்தியா பேச்சு.

ஜெயலலிதாவின் 76 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் சுரேஷ்குப்தா, ரோஜர்,எம்ஆர்ஆர். முஸ்தபா,
நத்தர்ஷா, கட்பீஸ் ரமேஷ்,கயிலை கோபி உள்ளிட்டோர் வரவேற்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில்
அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,
ஆவின் முன்னாள் சேர்மன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், தலைமைகழக பேச்சாளர்
வீரபெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளர், நடிகை விந்தியா சிறப்புரையாற்றி பேசும் பொழுது எம்ஜிஆர் ஜெயலலிதா கட்டி காத்து வந்த அதிமுகவை இன்றைக்கு எடப்பாடியார் கட்டி காப்பாற்றி வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
அவர் ஒரு நல்ல மனிதர். உண்மையான தமிழன். எளிமையான தலைவர் ஆவார்.

 

தமிழ்நாட்டில் கடலைமிட்டாய் போன்று கஞ்சா வாங்க முடிகிறது.அதிமுக ஆட்சிக்காலத்தில் ஹீரோவாக இருந்த போலீசார் இன்றைக்கு திமுக ஆட்சியில் ஜீரோவாக இருக்கிறார்கள். இதனை தட்டிக் கேட்க இந்த அரசு தயங்குகிறது.

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தொடர்ந்து எடப்பாடியார் அமுல்படுத்தி மேலும் ஏழை, எளிய மக்கள் இளைஞர்கள், பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் திமுக அரசு ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிறகு ஜெயலலிதா மற்றும் எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களை படிப்படியாக நிறுத்திவிட்டார். பிரதமர் மோடி தமிழகத்தில் வருகை தந்து பேசும்பொழுது
எம்ஜிஆர், ஜெயலலிதாவை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். அவருக்கு இந்த இரண்டு தலைவர்களின் அருமை தெரிகிறது. ஆனால் இங்கிருக்கும் அண்ணாமலைக்கு அது தெரியவில்லை .அதிமுகவின் பலத்தை அண்ணாமலை புரிந்து கொள்ளும் காலம் வரும்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் பொதுமக்கள் திமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள்.

திமுகவை இந்த தேர்தல் மூலம் விரட்டி அடிப்பார்கள் என்று பேசினார்.

கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஜாக்குலின்,
பத்மநாதன், மாணவர் அணி மாவட்ட செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா, மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன் , நிர்வாகிகள் கலிலுல் ரகுமான்,
ஞான சேகர், ராஜேந்திரன், தென்னூர் அப்பாஸ், ஜான் எட்வர்டு, மீரான், வெங்கட் பிரபு,சகாபுதீன்,வெல்லமண்டி பெருமாள்,
ஜே.பி.சதீஷ்குமார்,
வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார்,சுரேஷ், ஜெயராமன்,
தினேஷ் பாபு மற்றும்
காசிபாளையம் சுரேஷ்குமார், அரப்ஷா, ராமலிங்கம்,கேபி ராமநாதன், ஜோசப் செபா ,கீழக்கரை முஸ்தபா, ரவீந்திரன்,
மாணவரணி ரஜினிகாந்த், வசந்தம் செல்வமணி,
வெல்லமண்டி கன்னியப்பன் அப்பாகுட்டி, பீமநகர் சீனிவாசன்,
தர்கா காஜா, எடத்தெரு பாபு, ஜெயக்குமார், எடமலைப்பட்டிபுதூர்
வசந்தகுமார், கேடிஏ ஆனந்தராஜ்,வாழைக்காய் மண்டி சுரேஷ், பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல்,குருமூர்த்தி, ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், உடையான்பட்டி செல்வம்,ஐடி நாகராஜ், ரமணிலால், தென்னூர் ஷாஜகான், கல்லுக்குழி முருகன்,பொம்மாசி பாலமுத்து சிந்தை ராமச்சந்திரன், கல் மந்தை விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்ட செயலாளர் டைமன் தாமோதரன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.