Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரையில் கடையை உடைத்து திருடிய வாலிபர்கள் 2 பேர் கைது.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி பாலக்கரையில் கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு.
2 வாலிபர்கள் கைது.

TVK ad

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். .இவரது மகன் சரவணன் ( வயது 43). இவர் காய்கறி மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இதை கண்காணித்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து அங்கு இருந்த பணம், சாக்லேட் பெட்டிகள், சோப்பு பெட்டிகள் மற்றும் பொருட்களை அள்ளிச் சென்றனர்.

இது குறித்து சரவணன் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி இராமலிங்கம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடையில் திருடியதாக திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன், கீழப்புதூரைச் சேர்ந்த ஜெயராமன் ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.