Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கண்டோன்மெண்ட் கருப்பண்ணசாமி கோவிலில் இன்று 47 ஆம் ஆண்டு குட்டி குடி விழா .

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி கண்டோன்மெண்ட்
கருப்பண்ணசாமி கோவிலில் இன்று 47ம் ஆண்டு குட்டி குடித்தல் விழர்

திருச்சி கண்டோன்மென்ட் கான்வென்ட் சாலையில் உள்ள ராஜ கணபதி முன்னுடையான், மாசி சப்பாணி கருப்பண்ண சுவாமி, முத்துமாரியம்மன் கோயில் திருவிழா பிப். 6-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் மஞ்சள் காப்பும், 13-ந் தேதி இரண்டாம் மஞ்சள் காப்பும் நடைபெற்றது. இதையடுத்து பிப்ரவரி 20-ந் தேதி (செவ்வாய்) இரவு 12.5 மணிக்கு திருத்தோ வீதி உலா நடந்தது. மறுநாள் (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு மாவிளக்குப் பூஜை, இரவு 9.05 மணிக்கு கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது,

TVK ad

இன்று (வியாழன்) காலை 10.05 மணிக்கு ஒத்தக்கடை மந்தையில் குட்டி குடித்தல் விழா நடந்தது.நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டன.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12.05 மணிக்கு அன்னதான நிகழ்ச்சியும், சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து காவிரியாற்றில் அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பூ விடும் விழா, இரவு 7 மணிக்கு விடையாற்றியுடன் திருவிழா முடிகிறது.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்துள்ளனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.