Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்ற 2 பேர் ஆட்டோவுடன் கைது.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில் கஞ்சா,போதை பொருட்கள்
விற்ற 2 பேர் ஆட்டோவுடன் கைது.

TVK ad

திருச்சி உறையூர் வைக்கோல்கார தெரு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து திருச்சி மாநகர மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கஞ்சா விற்ற உறையூர் செவந்திப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த உதயகுமார் என்கிற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் அதற்கு பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல் திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி கதிர்வேல் தலைமையிலான அதிகாரிகள் கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர் .
அப்போது ஒரு டீக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து காந்தி மார்க்கெட் ஜின்னா தெருவை சேர்ந்த சபிக் என்பவரை கைது செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.