அரசு நினைத்தால் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியும் . தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் நீலகண்டன் .
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் நீலகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
SSTA அமைப்பு நடத்தும் போராட்டம் வெற்றி பெறட்டும்
சம வேலைக்கு சம ஊதியம் என்ற நோக்கத்துடனும், கொள்கையுடனும் இடைநிலை ஆசிரியர்கள் மூன்று நாட்களாக SSTA அமைப்பு ஒரு குடையின் கீழ் போராடி வருகின்றனர்.
இக்கோரிக்கையின் நியாயத்தை அரசு புரிந்திருந்தாலும் திறந்த மனதுடன் அணுகாமல் வேண்டுமென்றே ஒவ்வொரு முறையும் அவர்களை ஏமாற்றி வருவதாக எண்ணுகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறையில் நாட்டிலேயே இரண்டாம் இடம் வகிக்கும் தமிழ்நாடு
இந்த நிலையை அடைவதற்கு இடைநிலை ஆசிரியர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகவே உள்ளது.
2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் 2009க்கு முன் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் என்பது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட அநீதி.
ஒவ்வொரு முறையும் இடைநிலையாசிரியர்கள் ஊதியத்திற்காக குடும்பத்துடன் விடுமுறையில் போராடும்
பொழுது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நேரில் சென்று நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு தற்போது பாராமுகமாக இருப்பது நியாயமாகுமா?

சமூக நீதியை நிலைநாட்டுவதில் எப்போதும் முன்னணி வகிப்பதாக கூறும் தமிழக அரசு ஒரே பணியை பார்க்கும் ஆசிரியர்கள் வெவ்வேறு விதமான ஊதியத்தை பெறுவது சமூக நீதிக்கு புறம்பானது
என்று தெரியவில்லையா?
அநீதியை எதிர்த்து நீதிக்காக போராடும் என் இனமான உறவுகளுக்கு ஆதரவுக்கு கரம் நீட்டுகிறோம்.
மன உறுதியுடன் போராடும் அன்புச் சகோதரர் ராபர்ட் அவர்களுக்கும், அவர்களுடன் உறுதியோடு போராட்டக் களத்தில் நிற்கும் என் இனமான ஆசிரியப் பெருமக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
குழுக்களை போட்டு எத்தனை ஆண்டுகள் தான் இக்கோரிக்கையை ஆராய்ச்சி செய்வார்கள் என்று தெரியவில்லை.
அரசு நினைத்தால் இக்கோரிக்கையை எளிதில் நிறைவேற்ற முடியும். பேச்சு வார்த்தை என்ற நிலை இக்கோரிக்கைக்கு தேவையில்லை.
நியாயமான இக் கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனே ஏற்றுக் கொண்டு ஏற்கனவே வாக்களித்தபடி உடனடியாக ஆணைகளை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
என சே.நீலகண்டன்
மாநில பொருளாளர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.