Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் …

0

 

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சுப்பிரமணியபுரத்தில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது :-

தீர்மானம் : 1

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை, வட்ட கழகங்கள் உள்ளிட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி பகுதிகளில் ஏழை எளியோருக்கு நலத்திட்டங்கள் வழங்கி, இனிப்புகள் வழங்கி, கழக கொடியேற்றி ஜெயலலிதாவின் திருவுருவச்சிலை மற்றும் திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மிகுந்த சிறப்புடன் கொண்டாடுவது

தீர்மானம் : 2

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைந்து நமது மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர் மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் கழக பொதுசெயலாளர், முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடையாளம் காட்டுகின்ற வேட்பாளர்களை அமோகமாக வெற்றி பெற செய்ய அனைவரும் சிறப்பாக தேர்தல் பணியாற்றி அயராது பாடுபடுவது

தீர்மானம் : 3

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வாழவந்தான்கோட்டையில் 300 மீட்டர் இடைவெளியில் இரண்டு சுங்கசாவடிகளை அமைத்து இரண்டு முறை சுங்க கட்டணம் செலுத்தும் வகையில் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வருகின்ற 23.02.2024ம் தேதி கழக அமைப்பு செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையிலும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் முன்னிலையிலும் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றியடைய சபதமேற்போம்

தீர்மானம் : 4 சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், கழக பொதுச்செயலாளர், எடப்பாடியின் ஆணைக்கிணங்க முன்னாள் முதல்வர் அம்மாவின் 76-வது பிறந்தநாள் விழா பொதுகூட்டங்களை 3 சட்டமன்ற தொகுதிகளிலும் மிகசிறப்பாக நடத்துவது

தீர்மானம் : 5
சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், நாளைய முதல்வர் கழக பொதுச்செயலாளர், எடப்பாடி ஆணைக்கிணங்க, விடியா திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நமது மாவட்டத்தில் தெருமுனை பிரச்சார கூட்டங்களை முழு ஈடுபாட்டோடு நடத்திக் கொண்டிருக்கும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நன்றியினையும், பாராட்டையும் தெரிவிப்பதோடு இலக்கு 234/2026 என்கிற நோக்கில் கழகத்தை வழிநடத்தி கொண்டிருக்கும் எடப்பாடி கரத்தை நமது மாவட்டத்தில் வலுபடுத்தும் நோக்குடனும் 3/3 என்கிற நோக்குடன் சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக சட்டமன்ற தேர்தல் வரை தொடர்ந்து தெருமுனை பிரச்சார கூட்டங்களை மேற்கொள்வது

தீர்மானம் : 6
மக்களுக்கு
நல்ல
திட்டங்களையும்,
கொடுத்த
வாக்குறுதிகளையும் நிறைவேற்றி மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்கு
மாறாக,
பொது
இடங்களிலும்,
தனியார் இடங்களின்
உரிமையாளர்களை மிரட்டியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்
வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைப்பதும்,
திமுக கொடிக்கம்பங்கள் அமைப்பது மட்டுமே தனது பிறவிப் பயன்
என நினைத்து உதயநிதிஸ்டாலினின் துணை மாப்பிள்ளை போல்
செயல்படும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர்
திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ்
பொய்யாமொழி செயல்பாட்டை கண்டித்தும், மக்களின் நலனுக்காக
மாமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய எத்தனையோ தீர்மானங்களை
எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, உதயநிதியை
திருப்தி படுத்துவதற்காக 50ஆண்டுகளுக்கும் மேலாக பாராம்பரியமிக்க
TVS நிறுவனம் இயங்கி வந்த பகுதியான டிவிஎஸ் டோல்கேட் என்கிற
பெயரை மாற்றி, கருணாநிதி டோல்கேட் என மாநகராட்சியில்
தீர்மானம் கொண்டு வர முயற்சிப்பதை வன்மையாக கண்டிப்பது

தீர்மானம் : 7
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கடலில் கலந்து வீணாகும் நூற்றுக்கணக்கான டிஎம்சி தண்ணீரை வரும் காலங்களில் மாயனூர் கதவணை அருகில் நீரேற்று நிலையம் அமைத்து அதன் மூலம் காவிரி தண்ணீரை, குழாய் வழியாகவோ அல்லது கால்வாய் வழியாகவோ பொன்னணியாறு மற்றும் கண்ணூத்து அணைகளுக்கு கொண்டு சென்று மணப்பாறை சுற்று வட்டார பகுதிகளான மருங்காபுரி, கண்ணூத்து, வையம்பட்டி ஆகியவற்றில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசன பகுதிகள் பயன்படும் வகையிலான இந்த திட்ட ஆய்வு பணிகளுக்காக அன்றைய முதல்வர், குடிமராமத்து பணிக்கு முக்கியத்துவம் தரும் எடப்பாடி 40 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார். ஆனால் அதன்பிறகு பொறுப்பேற்ற விடியா திமுக அரசு தற்போது வரையில் அந்த திட்டத்தினை கிடப்பில் போட்டுள்ளது. மேலும்

லால்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள விவசாய பெருங்குடியினர் தங்களது விளைபொருட்களை சந்தை படுத்துவதற்கும், உரம் விதை உள்ளிட்ட வேளாண் உள்ளீட்டு பொருட்களை வாங்குவதற்கும் மைய பகுதியாக திருச்சி மாநகரத்தை சார்ந்திருக்க வேண்டியிருப்பதால் லால்குடி இடையாற்றுமங்கலம் ஊராட்சி, தண்ணீர்பந்தல் கிராமத்தில் இருந்து திருவெறும்பூர் கிளிக்கூடு கிராமத்தை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.94கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும் இன்றுவரை அதற்கான பணிகள் தொடங்க படவில்லை. மேற்கண்ட திட்டங்களை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும. இல்லையேல் லால்குடி மற்றும் மணப்பாறை சட்டமன்ற தொகுதிகளில் விவசாய பெருங்குடியினரையும், பொது மக்களையும் திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .

இக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி செயலாளர் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.