Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாவட்டத் தலைவர் ரெக்ஸிடம் பணம் கொடுத்து பதவி வாங்கியவர்கள் நிர்வாகிகள் அல்ல. 80% உண்மையான காங்கிரஸ் நிர்வாகிகள் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜிக்கே ஆதரவு. சேவாதாள காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெகதீஸ்வரி .

0

 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருநாவுக்கரசர் . நன்றி கூற கூட தொகுதி பக்கம் வராதவர் .

தேர்தலின் போது தேர்தல் பூத் திறப்பு விழாவுக்கு தனது சொந்தக் கட்சிக்காரர்களுக்கு கூட காத்திருக்காத திமுக முதலமைச்செயலாளர் கே.என். நேருவைய அரை மணி நேரம் மேல் காக்க வைத்தவர் . இருந்தாலும் கூட்டணி கட்சி என்பதால் கே.என். நேரு அவரை வெற்றி பெற உழைத்தார் .

வெற்றி பெற்றவர் தொகுதி பக்கமே வராதவர் நான்கரை ஆண்டுகள் பின் தற்போது மீண்டும் திருச்சியில் சீட்டு கேட்பதால் தொகுதி பக்கம் அடிக்கடி வந்து சீன் போட்டு வருகிறார் . இவர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கூட இதுவரை எதுவும் செய்ததில்லை. நிர்வாகிகளுக்கு தேவையானவற்றை மனுவாக எழுதி தாருங்கள் என வெற்றி பெற்ற உடன் கூறியவர் இதுவரை அந்த மனுவை பிரித்துக் கூட பார்க்கவில்லை .

காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கூட எதுவும் செய்யாதவர் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் , பொதுமக்களுக்கும் என்ன நலத்திட்டங்களை கொண்டு வந்தார், எந்த தேர்தல் வாக்குறுதியை செய்து முடித்தார் என்பது தெரியவில்லை .

எதுவுமே யாருக்குமே செய்யாத (ரெக்ஸை தவிர ) திருநாவுக்கரசருக்கு கண்டிப்பாக திருச்சி தொகுதியில் மீண்டும் சீட் வழங்கக் கூடாது . இவருக்கு சீட்டு வழங்கப்படாவிட்டால் அவர் மீண்டும் பாஜகவில் இணையவும் ரெடியாக உள்ளதாக கூறப்படுகிறது .

திருச்சியில் 4 முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அடைக்கலராஜ் .
பாராளுமன்ற உறுப்பினராக திருச்சிக்கு பல புதிய திட்டங்களை கொண்டு வந்து அசத்தியவர். குறிப்பாக தற்போது உள்ள செந்தண்னீர்புரம், திருவெறும்பூர் பகுதிகளில் உள்ள பாலங்களுக்கு அடிக்கல் நாட்டியவர்.

இவரைப் போன்று தான் இவரது மகன் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ். சுறுசுறுப்புடன் கட்சி நிர்வாகிகளை அனுசரித்து செல்வதிலும் , பொதுமக்களுக்கு பல உதவிகளை வலது கரம் செய்வது இடது கரம் தெரியாமல் செய்வதிலும் சிறந்து விளங்கி வருகிறார் ஜோசப் லூயிஸ் .

திருநாவுக்கரசர் மூலம் திருச்சி மாவட்ட தலைவர் ஆன கவுன்சிலர் ரெக்ஸ் . பழைய நிர்வாகிகளை நீக்கி விட்டு பணம் தந்த நபர்களை காங்கிரஸ் நிர்வாகிகளாக நியமித்து வருகிறார்.

திருநாவுக்கரசு மற்றும் ரெக்ஸ் இருவர் மீதும் திருச்சி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் .

திருச்சியில் ஜோசப் லூயிஸ் அடைக்கல்ராஜ் போட்டியிட்டால் அவரது வெற்றிக்காக 80 சதவீத காங்கிரஸ் நிர்வாகிகள் செயல்படுவார்கள். 100% காங்கிரஸ் தொண்டர்களும் ஜோசப் லூயிஸ் அடைக்கல்ராஜ்க்கு மட்டும்தான் பணியாற்றுவோம் என கூறி வருகின்றனர் .

மேலும் திருச்சியில் திருநாவுக்கரசுக்கு சீட் கொடுக்கக் கூடாது எனவும் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜிக்கு மட்டுமே சீட் வழங்க வேண்டும் எனவும் திருச்சி பாராளுமன்ற தொகுதி உள்ள அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளும் இணைந்து கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அனுப்ப உள்ளோம்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் காங்கிரசுக்கு அதுவும் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜுக்கு மட்டுமே சீட்டு வழங்க வேண்டும் . அவரது வெற்றிக்கு மட்டுமே பாடுபடுவோம் என அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் சேவாதாள மாநில செயலாளர் திருச்சி ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.