Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மு க ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் .

0

'- Advertisement -

 

Ad banner

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்
திருச்சி தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – I பாசிசம் வீழட்டும்! ஜனநாயகம் வெல்லட்டும்’ என தொகுதிவாரியான பிரச்சாரக் கூட்டங்கள் வரும் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. அதனை சிறப்பாக நடத்திட மாநில இளைஞர் அணி செயலாளர்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் காணொளி காட்சி கூட்டம் நடந்தது. இதை தொடர்ந்து.
திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வன்னை அரங்கநாதன் சேகரன், சபியூல்லா , மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாநில அணி நிர்வாகி செந்தில் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி மற்றும் கரூர் பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெறக்கூடிய கூட்டங்களில் பெரும் திரளாக கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிப்பது ,
மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்களுக்கு உரிமை தொகையை கிடைக்க அந்தந்த பகுதி நிர்வாகிகள் உடனடியாக முயற்சி எடுத்து பணிகளை செய்திட வேண்டும்,

மார்ச் 1 – ந் தேதி அன்று நடைபெறக்கூடிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது எனவும் இக்கூட்டத்தில் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.