Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக மீது நம்பிக்கை வைத்து மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். திருச்சியில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் .

0

 

அனைத்து மக்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமையும்.

அதிமுக துணை பொது செயலாளர் நத்தம் விசுவநாதன் பேட்டி

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு திருச்சி மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த பிரதநிதிகளிடம் கருத்து கேட்பு ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும், அதிமுக துணை பொதுச் செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் புதுக்கோட்டை விஜயபாஸ்கர், திருச்சி தெற்கு ப.குமார், திருச்சி வடக்கு மு.பரஞ்ஜோதி, மாநகர் ஜெ.சீனிவாசன், அரியலுார் தாமரை ராஜேந்திரன், புதுக்கோட்டை வைரமுத்து, பெரம்பலுார் இளம்பை தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், 5 மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து பொதுமக்கள், தொழில், வர்த்தகம், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் தங்களது கருத்துகள், கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பேசினர்.

கூட்டத்துக்குப்பின் நத்தம் விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:

லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கையை, இதுவரை இல்லாத வகையில் முற்றிலும் மாறுபட்ட வகையில் அனைத்து தரப்பினரையும் நேரில் சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டறிந்து மக்களுக்கு பயன்படக்கூடிய அறிக்கையாக தயாரிக்க அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் 9 மண்டலங்களில் அனைத்து தரப்பு பொதுமக்கள் மற்றும் இயக்கங்களின் கருத்துக்கள், கோரிக்கைகள் கேட்கப்பட்டு வருகிறது.

இதுவரை எந்தக்கட்சியும் வெளியிடாத வகையில், அனைத்து தரப்பு மக்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் அதிமுகவின் இந்த தேர்தல் அறிக்கை அமையும். அதிமுக தேர்தல் அறிக்கையில் தங்களது கருத்துகள், கோரிக்கைகள் இடம்பெற்றால் அதற்கு விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர்களது நம்பிக்கை வீண் போகாத அளவுக்கு, மக்கள் தெரிவித்துள்ள பிரச்னைகள் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். அதோடு மட்டுமில்லாமல், தேர்தலுக்குப்பின் அப்பிரச்னைகளை தீர்ப்பதற்கும், அப்பிரச்னைகளுக்கு மத்தியில் அமையும் அரசு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் அதிமுக மற்றும் பொதுச்செயலாளர் பழனிசாமியின் செயல்பாடு இருக்கும். இதன்மூலம் மக்கள் பயன்படும், பாராட்டும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை அமையும்.

பட்டியலின மக்கள் பாதிக்கப்படுவதும், தாக்கப்படுவதும் திமுக ஆட்சியின் அன்றாட நிகழ்வாக அமைந்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண பழனிசாமி தலைமையில் அதிமுக அமைய வேண்டும்.’’, என்றார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,‘‘திமுகவின் 30 ஆண்டுகால ஆட்சியில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி கூட, மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு அவர்கள் வஞ்சிப்படுகின்றனர்’’, என்றார்.
கூட்டத்தில், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சின்னசாமி, உதயகுமார், வைகைச்செல்வன், ஓ.எஸ்.மணியன், செம்மலை, சிவபதி, அமைப்புச் செயலாளர்கள் டி.ரத்தினவேல், ஆர்.மனோகரன், வளர்மதி, வரகூர் அருணாச்சலம்,மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன், கவுன்சிலர் அரவிந்தன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பொன். செல்வராஜ்
மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், ஜெ.பேரவை என்ஜினியர் கார்த்திகேயன், இளைஞர் அணி முத்துக்குமார், மாணவரணி என்ஜினியர் இப்ராம் ஷா,,எம்ஜிஆர் மன்றம் கலிலுல் ரகுமான், சிறுபான்மை பிரிவு மீரான், இலக்கிய அணி பாலாஜி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி ஞானசேகர், ஐ.டி. பிரிவு வெங்கட் பிரபு, கலைப் பிரிவு ஜான் எட்வர்ட், தொழிற்சங்கம் ராஜேந்திரன்,
அப்பாஸ், பாசறை இலியாஸ்,பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா,வெல்ல மண்டி சண்முகம், பூபதி,ஏர்போர்ட் விஜி,, ரோஜர், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, ராஜேந்திரன், கலைவாணன், பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள், கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி,
வழக்கறிஞர் அணி மாவட்ட இணைச்செயலாளர் முல்லை சுரேஷ், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை தலைவர் வக்கீல் முத்துமாரி , வக்கீல்கள் சசிகுமார், ஜெயராமன், தாமரைச்செல்வன்,
கிருஷ்ணவேணி
மற்றும் டிபன் கடை கார்த்திகேயன்,பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல்,சதர், வாழைக்காய் மண்டி சுரேஷ்,அப்பா குட்டி, கே.டி.அன்பு ரோஸ், சக்கரவர்த்தி. கே.டி.ஏ ஆனந்தராஜ், எடத்தெரு பாபு,உடையான் பட்டி செல்வம்,டைமன் தாமோதரன், ஜடி நாகராஜ் அப்பாக்குட்டி,காசிபாளையம் சுரேஷ் குமார், வசந்தம் செல்வமணி, எ.புதூர்.வசந்தகுமார், என்ஜினியர் ரமேஷ், நாட்ஸ்சொக்கலிங்கம், ஜெயகுமார், வண்ணாரப்பேட்டை ராஜன், பொன். அகிலாண்டம், ஆரி, ஜோசப் ஜெயா, சிதிஷ், சிங்கமுத்து, ரஜினிகாந்த், கங்கைமணி,
எனர்ஜி அப்துல் ரகுமான்,டி ஆர் சுரேஷ் குமார், ,வெஸ்லி,மீனவர் அணி பாலு,முன்னாள் கவுன்சிலர் மகாலட்சுமி,
மலைக்கோட்டை ஜெகதீசன்,மார்க்கெட் பிரகாஷ், ராமமூர்த்தி, ரமணி லால்,வரகனேரி சதீஷ்குமார்,தென்னூர் ஷாஜகான், ராஜா, தினகரன், கேபி. ராமலிங்கம், சாததனூர் வாசு, ஒதக்கடை மகேந்திரன், மணிகண்டன்,
முன்னாள் கவுன்சிலர் நத்தர்ஷா,இன்ஜினியர் ராஜா கல்லுக்குழி முருகன், வெல்லமண்டி கன்னியப்பன், எடத்தெரு எம்கே குமார்,
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தெற்கு மாவட்டம் சார்பில்
எஸ்பி பாண்டியன், ராவணன், முத்துகுமார்.சண்முக பிரபாகரன்,
மணப்பாறை சிவசுப்பிரமணியன்,மகளிர் அணி சாந்தி,
வக்கீல்கள் அழகர்சாமி, முருகன் உள்ளிட்ட பலரும்,
வடக்கு மாவட்டம் சார்பில்
முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு (எ) சுப்ரமணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான்,மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், அறிவழகன் விஜய்,ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி முத்து கருப்பன், கோப்பு நடராஜ், ஜெயக்குமார், உப்பிலியபுரம் அழகாபுரி செல்வராஜ்,
துறையூர் பிரகாஷ் அறிவழகன்,மாவட்ட கவுன்சிலர் அய்யம்பாளையம் ரமேஷ்
உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.