Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கீழ்க்கல்கண்டார்கோட்டை ஸ்ரீதேவி மாரியம்மன் கோயில் இடத்தை ஆக்கிரமித்துள்ள நபர்களுக்கு துணை போகிறார்களா திருவெறும்பூர் தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர். பொதுமக்கள் வேதனை.

0

 

கோயில் இடம் விரைவில் மீட்கப்படுமா?

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கலெக்டரிடம் மனு அளித்தும் பயனில்லை.

கோயில் இடத்தை விரைவில் மீட்டுத்தர வேண்டும் என கீழக்கல்கண்டார்கோட்டை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி கீழக்கல்கண்டார்கோட்டை பெரியார் தெருவில் ஸ்ரீதேவி மாரியம்மன் கோயில் உள்ளது.

இப்பகுதியில் குடியிருக்கும் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இக்கோயில் காவல் தெய்வமாக விளங்குகிறது. இந்நிலையில் இக்கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளார். இதனால் கோயிலுக்கு உண்டான வாகனங்கள் மற்றும் கோயில் பொருட்களை வைக்க இடமின்றி கோயில் உள்வளாகத்திலேயே வைத்து பூட்டி வைக்க வேண்டியுள்ளது.

எனவே கோயிலுக்கு சொந்தமான சர்வே எண் 70 /3யை இடத்தை ஆக்கிரமிப்பாளர் மதிவாணன் என்பவர் சர்வே எண் 70/ 3 ஏ என போலியாக பட்டா தயார் செய்து ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளார் .

இதன் முழு விவரங்களுடன் ஆக்கிரமிப்பாளர் இடமிருந்து மீட்டுத்தர வேண்டும் என்று கடந்த 30.10.2023 அன்று கலெக்டரிடம் ஊர்பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து நிலஅளவையர் மற்றும் அதிகாரிகள் வந்து இடத்தை அளவீடு செய்தனர். மதிவாணன் ஆக்கிரமித்து அரசாங்க வீடு கட்டி உள்ளார் என்பதை உறுதி செய்தனர். இருப்பினும் ஆக்கிரமிப்பு இடம் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. கலெக்டரிடம் மனு அளித்து இரண்டு மாதமாகியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செல்படுவதாக தெரிகிறது இதுகுறித்து திருவெறும்பூர் தாசில்தார் ஜெயப்பிரகாசம் அவரிடம் ஊர்மக்கள் சென்று கேட்டால் வருவாய் ஆய்வாளர் சௌமியா இதுசம்பந்தமாக இன்னும் அறிக்கை தரவில்லை. அவர் கொடுத்தால்தான் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று தட்டிக்கழித்து வருகிறார்.

கோவில் இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு

 

மேலும் குடியிருக்கும் வீட்டினை இடித்தால் சரியா இருக்காது என ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக தாசில்தாரூம், வருவாய் ஆய்வாளரும் காலம் தாழ்த்தி வருவதை பார்த்தால் பெரும் தொகையை எதுவும் பெற்றுக் கொண்டார்களா என தெரியவில்லை.

எனவே நேர்மையாக செயல்பட்டு வரும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் இவ்விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி 800 குடும்பங்களின் காவல் தெய்வமான இந்த கோயில் இடத்தை மீட்டுத்தர வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.