Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை போதைப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு . மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி குற்றச்சாட்டு.

0

 

திருச்சி மாநகராட்சி பகுதியில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு
மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி புகார்.

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் வைத்திநாதன் முன்னிலை வகித்தார் .

கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன், ஆண்டாள் ராம்குமார், துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் அனைத்து மாமன்ற கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்
கூட்டத்தில்
மேயர் அன்பழகன் : – திருச்சி மாநகராட்சி சிறப்பாக செயல்படுவதற்கு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில்,அமைச்சர் கே. என். நேரு பல்வேறு திட்டங்களை திருச்சி மாநகரத்துக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இந்த மாநகராட்சியின் சிறப்பான பணிகளை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.இதற்கு காரணமாக இருந்த கமிஷனர், அதிகாரிகள், கவுன்சிலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலத்தில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்,புதிய மார்க்கெட் போன்றவை அமையும் பொழுது திருச்சி மாநகராட்சி மிகப்பெரிய வளர்ச்சி பெறும் அடுத்த ஆண்டு இந்தியாவிலேயே திருச்சி மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக வருவதற்கு வழிவக்கும்.

மதிவாணன் மண்டல தலைவர் :-திருச்சி டோல்கேட் பகுதியில் தலைவர் கருணாநிதியின் சிலையை விளையாட்டு துறை அமைச்சர் திறந்து வைத்தார் தற்பொழுது டோல்கேட் என்று அழைக்கப்பட்டு வரும் அந்த இடம் இனி கலைஞர் டோல்கேட் என மாற்றி அறிவிக்கப்பட வேண்டும்.அதற்கு மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

சுரேஷ் (இ.கம்யு ஸ்ட்)விரைவில் குழுமாயி அம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது அதற்குள் அந்த பகுதியில் உள்ள தெருக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு.அம்பிகாபதி:-திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி மட்டுமின்றி மாநகர் பகுதி முழுவதும் கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் கடைகளில் தாராளமாக விற்கப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமால் முஸ்தபா ( தி.மு.க.)
எனது வார்டுக்கு உட்பட்ட குழுமிக்கரை சாலையில் உள்ள மொழிப்போர் தியாகிகள் கீழப்பலூர் சின்னசாமி மற்றும் விராலிமலை சண்முகம் நினைவிடத்தை நினைவு மண்டபமாக புதுப்பிக்க நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் தமிழக முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின், மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்டவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்.ஐ.சி. சங்கர் (தி.மு.க.);-
கோடை காலத்தை கருத்தில் கொண்டு எங்களது வார்டில் கூடுதலாக புதிய போர்வெல் அமைத்து குடிநீர் வழங்கவும், மேலும் மேல புலிவார் ரோட்டில் வாடகை வருவாய் கட்டிடங்கள் மூலம் சரியான வருவாய் வர தகுந்த ஏற்பாடு செய்யவும், தேசிய அளவில் திருச்சி மாநகராட்சி முதல் பரிசு பெற உதவிய திருச்சி மாநகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் கெளரவம் செய்யும் வகையில் உரிய மரியாதை அளிக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஜவகர் (காங்) : ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்ற இடைக்கால தடை விதித்த நிலையில் மாநகராட்சி இந்த வழக்கில் இணைத்துக் கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும்.
மேயர் அன்பழகன்:-இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜாபர் அலி (திமுக): எனது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கிறது. அதனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்து செல்வம் (திமுக) :
பெரியார் கல்வி நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பைஸ் அகமது (மனிதநேய மக்கள் கட்சி) :-எனது வார்டில் சமுதாயம் கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.

திமுக கவுன்சிலர் :
எனது வார்டில் 2 பள்ளி குழந்தைகளை நாய் கடித்து விட்டது. இது தொடர்பாக மேயர் கமிஷனரிடம் புகார் கூறியுள்ளேன். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள். கமிஷனர் வைத்திலிங்கம் :- நாய்களை பிடிப்பதில் மாநகராட்சி ஓரளவுக்கு தான் நடவடிக்கை எடுக்க முடியும். தெருக்களில் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்து மீண்டும் அங்கேயே விட்டு விட வேண்டும் என்று தான் சட்டம் சொல்கிறது. அதனால் நாம் அதனை வேறு இடத்தில் கொண்டு போய் தங்க வைக்க முடியாது
இவ்வாறு விவாதம் நடந்தது.

Leave A Reply

Your email address will not be published.