
திருச்சி தென்னூர் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஓ.பி.எஸ் அணி சார்பில் அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ராஜ்மோகன், சாமிக்கண்ணு, ரத்தினவேல், அவைத்தலைவர் வக்கீல் ராஜ்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, சந்து கடை சந்துரு, கணேசன், பிரதீப் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.