Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நடைபெற்ற ரெட்டி அறக்கட்டளைக்கான 15ம் ஆண்டு கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் .

0

 

திருச்சி மாவட்டக் கைப்பந்து (Handball) சங்கத்துடன் திருச்சி காவேரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய ரெட்டிக் கல்வி அறக்கட்டளை சுழற்கோப்பைக்கான கைப்பந்து

10.1.24 அன்று திருச்சி மாவட்டக் கைப்பந்து (Handball) சங்கத்துடன் திருச்சி காவேரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய ரெட்டிக் கல்வி அறக்கட்டளைக்கான 15வது ஆண்டு சுழற்கோப்பை மாவட்ட அளவில் 12 வயதுக்கு உட்பட்ட இளைய மாணவ மாணவியருக்கான கைப்பந்து போட்டி காவேரி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதனைப் பள்ளி நிர்வாகக் குழுவின் தலைவர் முரளிதரன் அவர்கள் தொடக்கி வைத்தார். புள்ளியின் முதல்வர் R.கல்யாணி வரவேற்புரை வழங்கினார்.

இரண்டாம் நாளான (11.1.24) இன்று மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் வாழ்த்துரையைக் காவேரி கல்லூரி நிர்வாகக் குழுமத்தின் செயலாளர் K.நீலகண்டன் வழங்கினார்.

மற்றும் சிறப்பு விருந்தினர் ரெட்டி கல்வி அறக்கட்டளையின் செயலாளர் M.ஜெயராமன் சிறப்புரை ஆற்றி வெற்றிப் பெற்ற அணியினருக்கு ரெட்டி கல்வி அறக்கட்டளையின் சுழற்கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். திருச்சி மாவட்டக் கைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் A.ஸ்டான்லி வினோத் அவர்களும் தலைவர் B விக்னேஷ்வரன் அவர்களும் இவ்விழாவில் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.

இதில் 10 மாணவர் அணிகளும் 9 மாணவி அணிகளும் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டக் கைப்பந்து சங்கச்செயலாளர் R,கருணாகரன் நன்றியுரை வழங்கினார்.

மாணவர் அணியில் வெற்றிபெற்றோர் விபரம் :

1. முதலிடம்

எஸ்.பி.ஐ.ஓ.ஏ மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி திருச்சி

2. இரண்டாமிடம் அரசு உயர்நிலைப் பள்ளி கே.கே.நகர் திருச்சி

3. மூன்றாமிடம்: எஸ் பி ஏ ஓ சிபிஎஸ்சி பள்ளி திருச்சி .

4. நான்காமிடம்

ஏ.கே.கே.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி திருச்சி

சிறந்த விளையாட்டு வீரர் B. கோகுல் (அரசு உயர்நிலைப் பள்ளி கே.கே.நகர்)

சிறந்த கோல்கீப்பர் A.அகமத் ஃ பகிம் (எஸ்.பி.ஐ.ஓ.ஏ மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி)

நம்பிக்கை வீரர்

B.அஜய் (எஸ்.பி.ஐ.ஓ.ஏ சி.பி.எஸ்.இ. பள்ளி, திருச்சி)

மாணவிகள் அணியில் வெற்றி பெற்றோர்

1. முதலிடம்
காவேரி சி.பி.எஸ்.இ. பள்ளி திருச்சி

2. இரண்டாமிடம் சான்ட்டா மரியா. திருச்சி

3. மூன்றாமிடம்
இராஜாஜி வித்யாலயா சி.பி.எஸ்.இ. திருச்சி

4. நான்காம் இடம் : காவேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

சிறந்த விளையாட்டு வீராங்கனை- ஆ.ஹனுஸ்ரீ (காவேரி சி.பி.எஸ்.இ. பள்ளி. திருச்சி)

சிறந்த கோல்கீப்பர்
பா. தன்ய தர்ஷினி (சான்ட்டா மரியா, திருச்சி

நம்பிக்கை வீராங்கனை ம. அக்ஷரா (காவேரி மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி, திருச்சி.

Leave A Reply

Your email address will not be published.