Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் பெட்ரோல் பங்க் கழிவறையில் முதியவர் மயங்கி விழுந்து சாவு .

'- Advertisement -

 

Ad banner

திருவரங்கம் மாம்பழச்சாலையில்

குளியலறையில் பிணமாக கிடந்த பெட்ரோல் பங்க் ஊழியர்.

திருச்சி மாவட்டம் முசிறி திருத்தியமலை வடக்கி பட்டி கோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவர் திருவரங்கம் மாம்பழச் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். நேற்று குளியல், கழிப்பறைக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வரவில்லை. உடனே மற்றொரு ஊழியர் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது சண்முகம் பேச்சு, மூச்சு இல்லாமல் தலையில் அடிபட்ட நிலையில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் .

இது குறித்து அவரது மகன் ராமராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

'- Advertisement -

Comments are closed, but trackbacks and pingbacks are open.