திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 34 ம் ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழாவில் சமூக ஆர்வலர் விஜயகுமாருக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது.

மயான பூமியில் மனைவி மகளுடன்
அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பில் சிறந்த சமூக சேவைக்கான விருது.
திருச்சி ஜே.கே.சி.அறக்கட்டளை ஐசிஎப் பேராயம் சர்வ சமய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் 34 ம் ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த சேவைகளுக்கான விருதுகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.
ஜே.கே.சி.
அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மற்றும் ஐசிஎப் பேராயத் தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி புத்தூர் பகுதியில் இல்லத்திலேயே பத்து ஆண்டுகளுக்கு மேலாக அனுதினமும் அன்னதானமும்,
நூற்றுக்கணக்கான புழங்கு பொருட்களை வைத்து புழங்கு பொருட்கள் காட்சியகமும்,
ஆயிரம் அனாதை பிணங்கள் நல்லடக்க பணியிலும், பத்தாயிரம் நூல்கள் கொண்டு இலவச நூலகமும்,
மயான பூமியில் மனைவி மகளுடன்
அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது .
ஜே.கே.சி. அறக்கட்டளை கௌரவத் தலைவர் பேராசிரியர் ரவி சேகர், அருள், நிர்வாக குழு உறுப்பினர் ஆடிட்டர் ரிச்சர்ட், சந்திரசேகரன், விஜிபி குழும திருச்சி தங்கையா, பேராசிரியர் சையத் ஜாகிர் ஹசன், அப்துல் அஜீஸ், நளினி வீரமணி, காயிதே மில்லத், ஆட்டோ ஸ்டீல் சங்கத் தலைவர் ரபீக் அகமது, மாதா மகிமை பறைசாற்று மையத் தலைவர் முனைவர் அசோகன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ, அப்துல் கலாம், ராமராஜ், நடராஜன், மூத்த வழக்கறிஞர் செல்வராஜ், மதிகுமார், பால் மாணிக்கம், போதகர்கள் ராஜன், மோகன், ஜெயசீலன், ரமேஷ், எபினேசர், ரஜினி நெகேமியா, ராஜலிங்கம், மாரிமுத்து, ஆரோக்கியசாமி, அலாவுதீன், அலெக்சாண்டர், சகுந்தலா சந்தானகிருஷ்ணன். உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக ஜேகேசி அறக்கட்டளை மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ரமேஷ் வரவேற்க, விக்னேஷ் நன்றி கூறினார்.
இவ்விழாவில் கலந்து கொண்ட ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது . மேலும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைவருக்கும் கிறிஸ்மஸ் கேக்குகள் வழங்கப்பட்டது .

