Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுக்கு பின் ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு .

0

 

நடப்பாண்டில் டிசம்பர் 7,8ம் தேதி நடக்க இருந்த அரையாண்டு தேர்வு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பாதிப்பால் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. பின்னர் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 12-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை வெள்ளத்தால் மாணவர்களுக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கியதால் மாணவர்களின் பாடப் புத்தகங்கள் சேதம் அடைந்தன. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. மேலும், 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் பள்ளிகள் திறந்த பிறகு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மற்ற மாவட்டங்களில் நடைபெற்று வந்த தேர்வுகள் இன்று முடிகிறது. நாளை 23ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது.

மீண்டும் ஜனவரி 2ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு, உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இன்று மாலையுடன் தேர்வு முடிந்து விடுகிறது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் தான் வழக்கமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையும் வருகிறது. அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் விடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.