Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி இசை கலைஞர்களுக்குள் மோதல். பீர் பாட்லால் தாக்கிய வாலிபர் கைது ‘

0

'- Advertisement -

 

Ad banner

இசை கலைஞருக்குள் மோதல். பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது.

திருச்சியில் வரகனேரி பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் மெல்சி தேசாய் ( வயது 40). எடத்தெரு பகுதியை சேர்ந்தவர், பிலா சிங் சுஜன் (வயது 27). இருவரும் இசைக் கலைஞர்கள்.
சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த பிலாசிங் சுஜன் மெல்சி தேசாய் யை பீர் பாட்டிலால் தலையில் ஓங்கி அடித்து விட்டு ஓடி விட்டார்.

இது குறித்து மெல்சி தேசாய் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிலா சிங் சுஜனை கைது செய்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.