திருச்சியில்
கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்.

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் நிஷாந்தினி (வயது 17). இவர் திருச்சியில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. உடனடியாக இதுகுறித்து அவரது தந்தை சுரேஷ் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவத்தில் திருச்சி கருமண்டபம் சமத்துவ நகரை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் மகள் சௌந்தர்யா, பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை பொன்னுச்சாமி அளித்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.