Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு விசாரணைக்கு நாளை ஆஜராக உள்ள நிலையில் பிரபுவை வெட்டிக் கொன்றது ஏன்? சரண்டர் ஆன 4 பேர்….

0

தொழிலதிபர் கே என் ராமஜெயம் கொலையில் விசாரிக்கப்பட்டவர் கொலை வழக்கில் நான்கு பேர் கைது .

தலைமறைவான ஒரு வாலிபரை பிடிக்க தனிப்படை போலீஸ் தீவிரம்.

திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான கே.என்.ரமஜெயம் கடந்த 2012 மார்ச் 29-ம் தேதி அன்று அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார்.
பின்னர் அவரது உடல் கல்லணை சாலையில் உள்ள காவிரிக்கரையோரம் உள்ள முட்புதரில், கைகள் மற்றும் கால்கள் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.


இக்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் கொலை நடந்து 13 ஆண்டுகளைக் கடந்த பிறகும் இதுவரை ஒருவரை கூட காவல்துறையால் கைது செய்ய முடியவில்லை. இந்த வழக்கு தொடர்பாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாததால் கடந்த 2012-ம் ஆண்டு சிபிசிஐடி விசாரணைக்கும், பின்னர் 2017-ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டது.
கடந்த 2021-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை சூடுபிடித்தது. இந்த வழக்கில் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் 13 ரவுடிகளைப் பிடித்து அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள புத்தூர் ஆபீஸர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த பிரபு என் பிரபாகரன் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் நிர்வாகியாக இருந்த பிரபாகரன், சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். திருச்சி அரசு மருத்துவமனை அருகே தாயார் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் வீட்டு பணிக்கு நர்ஸ் அனுப்பும் நிறுவனத்தை நடத்தி வந்த பிரபாகரன் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கத்தியைக் காட்டி மிரட்டியதாக ராமகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் பிரபாகரன் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

பிரபாகரனிடம் கடந்த 9-ம் தேதி அன்று ராமஜெயம் கொலை வழக்குத் தொடர்பாக சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராமஜெயம் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெர்ஷா ரக கார் யாரிடம் இருந்து யாருக்கு விற்கப்பட்டது என்பது தொடர்பாக பிரபாகரனிடம் போலீஸார் இந்த விசாரணையை நடத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைக்கு நாளை மீண்டும் ஆஜராக இறந்தார்.
இந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) இரவு 7 மணி அளவில் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஆஜராகி பிரபாகரன் கையெழுத்திட்டுள்ளர். பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய நிலையில், இரு சக்கர வாகனங்களில் வந்த 5 முகமூடி நபர்களால் அவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மர்மகும்பலால் சரமாரி வெட்டி கொலை:

திருச்சி புத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே, ஹோம் கேர் சர்வீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றை நடத்தி வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன்.( வயது45) .இவரது வீடு திருச்சி புத்தூர் ஆஃபீஸர்ஸ் காலனியில் உள்ளது.இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் திருச்சி மாவட்ட ஓட்டுநர் தொழிற்சங்க செயலாளராக இருந்தவர். இந்நிலையில் நேற்று இரவு பிரபு திருச்சி அரசு மருத்துவமனை எதிரேயுள்ள தனது நிறுவனத்தில் தனியாக இருந்திருக்கிறார். சரியாக இரவு 9.30 மணிக்கு 5பேர் கொண்ட கும்பல் அவரது அலுவலகத்தில் புகுந்து பிரபுவை சரமாரியாக தலையிலேயே வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த துணை ஆணையர் அன்பு மற்றும் அரசு மருத்துவமனை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். கொலைசெய்யப்பட்ட பிரபு முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டியா
அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பிரபு கொலை தொடர்பாக திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் மேல அம்பிகாபரத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 38), அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்த ரியாஸ் ராஜேஷ் (வயது 24),தஞ்சை கச்சமங்கலம் மகாதேவபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் பைலட் (வயது 28), அரியமங்கலம் காமாட்சி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த பஷீர் (வயது 29) ஆகிய நான்கு பேர் திருவெறும்பூர் போலீசில் சரணடைந்தனர். பின்னர் அவர்களை திருச்சிக்கு கொண்டு வந்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரணையில் பல்வேறு தகவல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. மேலும் அப்பு என்கிற ஹரி கிருஷ்ணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமஜெயம் கொலை வழக்கு விசாரணைக்கு நாளைக்கு பிரபு ஆஜராக உள்ள நிலையில் நேற்று படுகொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

Leave A Reply

Your email address will not be published.