Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில் மதுவிலக்கு பிரிவில் டிஎஸ்பியாக இருந்தவர் முத்தரசு (வயது 54). இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

அந்த புகாரின் அடிப்படையில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, நெல்லை மாவட்ட ஆவண காப்பக டிஎஸ்பியாக சில மாதங்களுக்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும் அங்கிருந்து திருச்சிக்கு மீண்டும் மாறுதலாகி நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக ஒரு மாதத்திற்கு முன் பதவி ஏற்றார்.

TVK ad

அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது.

பல இடங்களில் அவர் லஞ்சம் பெற்றதாக வந்த தகவலையடுத்து, இன்று காலை திருச்சி விமான நிலையம் அருகே உள்ள மொராய் சிட்டியில் உள்ள டிஎஸ்பி முத்தரசு வீட்டில்
பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமச்சந்திரா தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தஞ்சையில் உள்ள அவரது தந்தை வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.