Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆதரவற்ற மூதாட்டியை மீட்ட திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினார் மற்றும் உறையூர் போலீசார் .

0

 

ஆதரவற்ற மூதாட்டி உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க புகார் அளித்த சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்!

ஆதரவற்ற மூதாட்டியை மீட்டெடுத்து கங்காரு கருணை இல்லத்தில் ஒப்படைத்த உறையூர் காவல்துறையினர்!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவில் முன்பு ஆதரவற்று யாசகம் கேட்டு ஜீவனம் நடத்திவரும் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி வாழ்வாதாரத்திற்காக திருச்சி கிராப்பட்டி பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனமான கங்காரு முதியோர் இல்லத்தில் சேர்த்து மூதாட்டி உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அன்னதானம் முதல் அனாதை பிணங்கள் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் திருச்சி மாநகரம் உறையூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு பிரிவு ஆய்வாளருக்கு புகார் மனு அளித்தார்.

மனுவின் அடிப்படையில் திருச்சி மாநகரம் உறையூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு பிரிவு காவலர்கள் திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவில் முன்பு ஆதரவற்று யாசகம் கேட்டு ஜீவனம் நடத்திவரும் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை மீட்டு திருச்சி கங்காரு கருணை இல்லத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் கங்காரு கருணை இல்ல செவிலியர் மீரா சமூகப் பணியாளர் ரியாஸ் காவல் நிலையத்திற்கு நேரில் வந்தனர்.

மீட்டெடுக்கப்பட்ட மூதாட்டியை உறையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் துரைக்கண்ணு, வெங்கடேசன், தலைமை காவலர் செபாஸ்டின், அன்னதானம் முதல் அனாதை பிணங்கள் வரை நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் முன்னிலையில் கங்காரு கருணை இல்ல செவிலியர் மீரா சமூகப் பணியாளர் ரியாசிடம் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட மூதாட்டியை கங்காரு கருணை முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.

மீட்டெடுக்கப்பட்ட மூதாட்டி மெலிந்த தேகம் கொண்டவராகவும் தமிழ் மொழி பேசுபவராகவும் ரோஸ் வண்ண ரவிக்கை சட்டையும் சந்தனம் மற்றும் மெரூன் வண்ண புடவையும் அணிந்திருந்து கையில் வைத்திருந்த பையில் போர்வை மற்றும் மாற்றுத் துணி வைத்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.