திருச்சி பென்சனர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்ராஜ் (வயது 51). ஆட்டோ டிரைவர் .
குடிப்பழக்கம் உடையவர். இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
ஆட்டோ ஸ்டாண்டில் டிரைவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டதாகவும் அதற்கு பின்னால் தான் சம்பத் ராஜ் காணவில்லை எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து அவரது மனைவி ஜெயஸ்ரீ அளித்த புகாரின் அடிப்படையில் தில்லை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு மாயமான ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்.