திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய மு.சிவக்குமாா் பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குநராக பதவி உயா்வு பெற்று சென்னை இயக்குநரகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டாா்.
அதனைத் தொடா்ந்து, திருச்சி மாவட்டத்தின் புதிய முதன்மைக் கல்வி அலுவலராக கோ. கிருஷ்ணப்பிரியா நியமிக்கப்பட்டாா். அவா் புதன்கிழமை அன்று பொறுப்பேற்றுக்கொண்டாா்.
கள்ளக்குறிச்சியில் இருந்து பணி மாறுதலாகி வந்த அவருக்கு கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.