திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தனது சில வாரங்களாக பூத் கமிட்டி அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
பின்பு அதன் நிர்வாகிகளுடன் ஒவ்வொரு பூத்தாகச் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
முன்னாள் அமைச்சர் செம்மலையும் திருச்சி தெற்கு மாவட்டத்திற்க்கு உள்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த நிலையில் இன்று திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் பூத் கமிட்டி நோட் பதிவேற்றம் செய்யும் பணியினை மாவட்ட கழக செயலாளர் ப. குமார் ஆய்வு செய்து செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் வர்த்தக அணி செயலாளர் ராஜ மணிகண்டன், முன்னாள் ஊராட்சி செயலாளர் பாலமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுரேஷ் ,பிரசன்னா உடன் இருந்தனர்