Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குறைந்த கட்டணத்தில் குதிரை சவாரி.வாலிபர் கொலை வழக்கில் 4 நண்பர்கள் கைது.

0

 

மாமல்லபுரம் கடற்கரையில் குதிரை சவாரி செய்யும் ரூபன் மாமல்லபுரம் கடற்கரையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.சுற்றுலா பயணிகளிடம் சவாரி பிடிப்பதற்காக ரூபன் கட்டணம் குறைவாக வாங்கியதாக தெரிகிறது.

சென்னையில் புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள புராதான நகரமாக மாமல்லபுரம் உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை சிற்பங்கள் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை. பல்லவர்களுக்காக இந்த சிற்பக் கலைகளை பார்ப்பதற்காக தமிழ்நாடு மட்டும் இல்லாமல், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் நாள்தோறும் மாமல்லபுரத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்திய அளவில் மிக முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கக்கூடிய மாமல்லபுரம் கடற்கரையில், பல்வேறு விதமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சிறு, சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் மாமல்லபுரத்தில் , சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூர் மக்கள் குதிரை சவாரியில் சுற்றுலா பயணிகளை கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் சுற்றுலா பயணிகளிடம், பணம் பெற்று தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். குதிரை சவாரிக்கு, குதிரை வைத்திருக்கும் பெரும்பாலானோர் வாடகை குதிரையை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலை கைபற்றிய மாமல்லபுரம் போலீசார், முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு இருந்திருக்கலாம் என கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து காவல்துறையை நடத்திய விசாரணையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் ரூபன் என்கிற உடும்பன் (வயது 23). மாமல்லபுரம் கடற்கரையில் குதிரை ஓட்டும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரூபன் மாமல்லபுரம் கடற்கரையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து மேலும் மாமல்லபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சுற்றுலாப் பயணிகளிடம் சவாரி பிடிப்பதற்கான கட்டணத்தை ரூபன் குறைவாக வாங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இதற்கு அப்பகுதியில் குதிரை சவாரி வியாபாரம் செய்பவர்கள், பலர் அவருக்கு எதிராக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் இது தொடர்பாக செய்யாரை சேர்ந்த பாலாஜி மாமல்லபுரம் பகுதியில் சேர்ந்த சதீஷ்குமார் பட்டிப்புலம் பகுதியை சேர்ந்த கார்த்தி மற்றும் அருளெசன் ஆகிய நான்கு பேரை மகாபலிபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் .இவர்கள் அனைவரும் மாமல்லபுரம் பகுதியில் வாடகைக்கு குதிரை வாங்கி ஓட்டும் தொழில் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. அன்று நள்ளிரவு அனைவரும் ஒன்றாக மது அருந்திய பொழுது, குறைவாக கட்டணம் வாங்கி வரும் ரூபனிடம் இது குறித்து கேட்டுள்ளனர், இது ஏற்பட்ட தகராறு காரணமாக, இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.