Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலக விபத்து மற்றும் உடற்காய தினத்தை முன்னிட்டு அட்லஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து விழிப்புணர்வு பேரணி.

0

 

உலக விபத்து மற்றும் உடற்காய தினத்தை முன்னிட்டு அட்லஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து விழிப்பபுணர்வு பேரணி.

திருச்சி அட்லஸ் மருத்துவமனையில் தொடங்கி, கலைஞர் அறிவாலயம், கரூர் பைபாஸ் சாலை, கோகினூர் தியேட்டர், மேரிஸ் திரையரங்கு ஜோசப் கல்லுாரி, சத்திரம் பேருந்து நிலையம் வழியாக அட்லஸ் மருத்துவமனையை வந்து அடைந்தது.

இந்த பேரணியை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, ரோட்டரி மாவட்ட தலைவர் கார்த்திக் ஆகியோர் தொடங்கி வைத்தானர்.

இந்த பேரணியில் ரோட்டரி Butterflies தலைவர் Rtn. சுபா ரோட்டரி Butterflies செயலாளர் Rtn. பராசக்தி ரோட்டரி Butterflies பொருளாளர் Rtn. ரேவதி மற்றும் அட்லஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மற்றும் எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் எஸ். ஜெய்கிஷ் மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் கீதா சங்கரி மற்றும் எலும்பு மூட்டு மருத்துவர்கள் டாக்டர் பாலாஜி, டாக்டர் அபிலேஷ் டாக்டர் காலித் செரிப் மற்றும் செவிலியர், செவிலிய மாணவர்கள், மாணவிகள் மருத்துவமனை ஊழியர்கள் சாலை விபத்து மற்றும் தீ-விபத்துக்களில் முன்னெச்சரிக்கையாக இருக்க வழியுறுத்தி உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

பேரணியில் சாலை விபத்து மற்றும் உடற்காய சம்பந்தப்பட்ட பதாகைகளை செவிலியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் எடுத்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.