Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இறந்தவரின் உடல் மீது அமர்ந்து அகோரி பூஜை செய்து நல்லடக்கம். வித்தியாசமான பூஜையால் பொதுமக்கள் பீதி

0

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளுரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 60) டீ கடை மாஸ்டராக பணிபுரிந்து வந்தவர்.

திடீர்னு நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் திருச்சி ஓயாமரி சுடுகாட்டிற்கு ஏரியூட்டுவதற்காக பாலசுப்பிரமணியத்தின் உடலை எடுத்து வந்தனர்.

பாலசுப்பிரமணியனின் உடலுக்கு அகோரி முறைப்படி, ஆன்மா சாந்தி பூஜை செய்து தகனம் செய்ய வேண்டும் என சரவணன் உள்ளிட்ட உறவினர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

இதையடுத்து அரியமங்கலத்தில் உள்ள அகோரி மணிகண்டன் என்பவரிடம் கோரிக்கை விடப்பட்டது.

காசியில் பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் தன் சீடர்களுடன் உடல் முழுவதும் திருநீறு அணிந்து கொண்டு ஓயாமரி சுடுகாட்டுக்கு வந்துள்ளார்.

அகோரி மணிகண்டன் இறந்த பாலசுப்பிரமணியனின் உறவினர்கள் வழக்கமான இறுதிச் சடங்குகளை செய்த பின்னர், தகன மேடையில் வைக்கப்பட்டிருந்த பாலசுப்பிரமணியனின் சடலத்தின் மீது மணிகண்டன் ஏறி அமர்ந்து கொண்டார்.

பின்னர் அகோர மந்திரங்கள் ஓதப்பட, பூஜைகளும் துவங்கிய நிலையில், சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும், சங்கு ஒலி எழுப்பியும், ஹர ஹர மகாதேவா என்றும் சுடுகாட்டில் முழக்கமிட்டனர். இதன்பிறகு பாலசுப்ரமணியனின் உடல் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜை நிறைவு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

அகோரி மணிகண்டன்
அகோரி மணிகண்டன் அரியமங்கலத்தில் இதேபோன்று வேறு சிலருக்கும் அகோரி பூஜைகள் செய்து உடல் நல்லடக்கம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 45 வயதான அவர் சிறு வயதிலேயே காசிக்குச் சென்று அகோரியாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது.

உடல் முழுவதும் திருநீறு பூசி இருக்கும் மணிகண்டன், அவ்வப்போது நள்ளிரவுகளில் அமர்ந்து கொண்டு சத்தம் போட்டு பூஜை செய்வார் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவரது தாயார் மேரி 3 வருடத்திற்கு முன்பு இறந்த போதும், சடலத்தின் மீது ஏறி அமர்ந்து, மணிகண்டன் பூஜை செய்து பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுடுகாட்டில் இருந்து திடீரென வந்த டமரா, சங்கு இதுபோன்ற சத்தம் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடையே பரபரப்பு நிலவியது.

Leave A Reply

Your email address will not be published.