Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீடு நிறுவனம் உயரிய விருது வழங்கி உள்ளது.

0

 

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீடு நிறுவனம் உயரிய தேசிய தரச்சான்று வழகியுள்ளது.

கல்லூரி தலைவர் சந்திரசேகரன் தகவல்.

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரி தேசிய தர மதிப்பீட்டில் ஏ++ உயர் மதிப்பு அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
இது தொடர்பாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தலைவர் சந்திரசேகரன் மற்றும் கல்லூரியின் முதல்வர் பால் தயாபரன் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தரமான உயர்கல்வியை வழங்குவதற்கான தேடலில் ஒரு குறிப்பிட்ட மயில் கல்லை எட்டியுள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்
தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார நிறுவனமான நாக் (என்ஏஏசி) அமைப்புசமீபத்தில் பிஷப் ஹீபர் கல்லூரிக்கு 4 வது சுழற்சியில் ஏ++ எனும் உயர் மதிப்பு அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது. குறிப்பாக பிஷப் ஹீபர் கல்லூரி நான்கு புள்ளிகளுக்கு 3.69 சிஜிபிஏ மதிப்பை பெற்றுள்ளது.
இதற்கு முன்பு பிஷப் ஹீபர் கல்லூரி நாக் மதிப்பீட்டு சுழற்சிகளில் 4+ மற்றும் ஏ 4 புள்ளிகளுக்கு 3.58 சிஜிபிஏ ஆகிய தரத்தை பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாக் அங்கீகாரம் ஒரு கடுமையான ஆனால் மிகு பலனளிக்கும் மதிப்பீட்டு செயல்மு றையாகும். பாடத்திட்ட வடிவமைப்பு, கற்றல்-கற்பித்தல் செயல்முறை, ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள், சமூக சேவை, உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகள், கல்விச்சூழல், மாணவர் ஆதரவு, நிர்வாகம் மற்றும் நிறுவன மதிப்பீடுகள் என்ற அளவு கோல்களின் அடிப்படையில் கல்லூரி மதிப்பிடப்பட்டுள்ளது. பல தரப்பட்ட மாணவ
சமுதாயத்துக்கு உயர்தரமான கல்வியை வழங்குதலில் இந்த கல்வி நிறுவனத்தின் அர்ப்பபணிப்பே ஏ++ மதிப்பை பெற தகுதிப்படுத்தியுள்ளது என்பதற்கு இந்த தரச்சான்றிதழே சாட்சி ஆகும்.மேலும் பிஷப் கல்லூரி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவது குறித்து சாதனை படைத்த மாணவர்களின் பட்டியல் குறித்து விரிவாக எடுத்து கூறினார்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேட்டியின் போது கல்லூரி செயலாளர் சுதர்சன், துணை முதல்வர்கள் அழகப்பன் மோசஸ், சத்தியசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.