Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி,அன்பரசன் பங்கேற்பு.

0

 

திருச்சி வரகனேரியில்
கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தா.மோ.அன்பரசன் பங்கேற்பு.

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் அரியமங்கலம் பகுதி சார்பில் திமுக பொதுக்கூட்டம் திருச்சி வரகனேரியில் பகுதி செயலாளர் ஏ.எம்.ஜி விஜய்குமார் தலைமையில் நடந்தது. வழக்கறிஞர் அமைப்பாளர் தினகரன், வட்ட செயலாளர் சாகுல் ஹமீது, வர்த்தக அணி அமைப்பாளர் சரவணன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

 

கூட்டத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ..அன்பரசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகர செயலாளரும்,மண்டல குழு தலைவருமான மதிவாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தா.மோ. அன்பரசன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

கூட்டத்தில் பண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜ், , மூக்கன், லீலா வேலு, ஆறு.சந்திரமோகன், துணை மேயர் திவ்யா, மண்டலகுழு தலைவர்ஜெய நிர்மலா, பகுதி செயலாளர்கள் கொட்டப்பட்டு தர்மராஜ், ..பாபு,
இளைஞர் அணி வெங்கடேஷ்குமார்,அரியமங்கலம் பகுதி நிர்வாகிகள் சண்முகம், தங்கவேல், ரங்கநாதன், கதிர்வேல், பண்ணை ராஜேந்திரன், செல்வம், அருண் சன்னாசி, நடராஜன், பரமசிவம், சௌந்தர பாண்டியன், ஜைனப் பீ,, சாகுல் ராஜா, ரவிச்சந்திரன், அப்துல் ரஜாக், ,வைத்தியநாதன், சுப்பிரமணியன் உதயகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

முடிவில் வட்ட செயலாளர் கருப்பையா, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் சரவணன் ஆகியோர் நன்றி கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.