Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே குறைவான விலையில் தங்க கட்டிகள் தருவதாக கூறி ரூ..25 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது.

0

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியை சோந்த அன்வா் பாஷா தனது நண்பா் ஜெகதீஷ் மூலம், தஞ்சாவூா் மாவட்டம், பண்டார ஓடையைச் சோந்த முகமதுகனி மகன் ஜியாவுதீன் (வயது48) என்பவரிடம், தன்னிடம் வெளிநாட்டு தங்கக்கட்டிகள் இருப்பதாகவும், கிராமுக்கு ரூ.500 குறைவாக விற்பனை செய்வதாக கூறியுள்ளாா். இதனை நம்பிய ஜியாவுதீனை, தங்கக் கட்டி தருவதாகக் கூறி செப். 18ஆம் தேதி துவரங்குறிச்சி மோா்னிமலை முருகன் கோயில் அருகே உள்ள பகுதிக்கு அன்வா் பாஷா வரவழைத்தாா்.

அதன்படி ஜியாவுதீன் ரூ.14.50 லட்சத்துடன் அங்கு சென்றாா். அப்போது, போலீஸ் உடையில் காரில் வந்த 7 போ கொண்ட கும்பல் ஜியாவுதீன் கழுத்தில் கத்தியை வைத்து பணத்தை பறித்துச் சென்று தப்பியது.

இதுகுறித்து ஜியாவுதீன் துவரங்குறிச்சி போலீஸில் புகாரி அளித்தாா். அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் தலைமையில் தனிப்படை அமைத்து பணத்தை பறித்துச் சென்ற கும்பலை தேடி வந்தனா்.

இந்நிலையில், டி. பொருவாய் பாலம் அருகே சந்தேகத்துக்குகிடமான வகையில் நின்றிருந்த காரை தனிப்படை போலீஸாா் சோதனையிடச் சென்றனா். அப்போது, காரில் இருந்த 4 பேர் தப்பிஓட முயன்றனா். அவா்களை விரட்டிப் பிடித்து போலீஸாா் விசாரித்தபோது, புதுக்கோட்டை மாவட்டம், ராங்கியம் பகுதியைச் சோந்த ரா.சரவணன் (வயது 42), கேரள மாநிலம் முண்டகாயம் பகுதியைச் சோந்த ஜே.அனீஸ்ஜேம்ஸ்(42), மதுரை மாவட்டம், கே.புதூா் ராமலெட்சுமி நகரைச் சோந்த ந.சக்திவேல் (51), திருவண்ணாமலை மாவட்டம் பையூரைச் சோந்த ம.பெருமாள்(46) என்பதும், ஜியாவுதீனிடம் பணம் பறித்த கும்பலைச் சோந்தவா்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் இவா்கள் கடந்த 28.01.2023 மஞ்சம்பட்டி சந்தனமாதா கோயில் அருகே திருச்சி பாலக்கரையை சோந்த மு.பாலசுப்பிரமணியனிடம் தங்கக் கட்டி தருவதாகக் கூறி ரூ.10.50 லட்சத்தை பறித்து சென்றவா்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களிடமிருந்து 100 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கட், 10 போலி தங்க பிஸ்கட்டுகள், 21 கைப்பேசிகள், போலி பத்திரங்கள், 2 காசோலை புத்தகம், 2 வாகனத்தின் போலி பதிவெண் பலகைகள், தமிழக அரசு முத்திரையுடன் கொண்ட சிவில் ஜட்ஜ் என எழுதப்பட்ட முத்திரை, 12 சிம் காா்டுகள், ரூ.2.70 லட்சம் ரொக்கம் மற்றும் காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னா் துவரங்குறிச்சி போலீஸாா், வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Leave A Reply

Your email address will not be published.