பெரம்பலூர் அரசு கல்லூரி சமூக பணித்துறை -சாக்சீடு குடும்ப ஆலோசனை மையம் இணைந்து அரசு திட்டங்கள் மற்றும் பெண்களின் தற்போதைய நிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தாளக்குடி பஞ்சாயத்து மகாத்மா காந்தி தேசீய ஊரக உறுதி திட்ட பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பஞ்சாயித்து தலைவர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. டாக்டர்.சங்கர் அரசு திட்டங்கள் பற்றியும்,சி.சசி ஆலோசகர் சாக்சீடு நிறுவன செயல்பாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.