விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உறையூரில் பாஜக சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம்.
திருச்சி உறையூர் கடைவீதி சின்ன சௌராஷ்ட்ரா தெருவில்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 26 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் ஜி.டி.தினகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தை பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன், சிந்தனையாளர் பிரிவு மாநில செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பட்டாசு கண்ணன், ஏ.ஆர்.பாட்ஷா,வெங்கடாசலம், ராஜேஷ், கருணாகரன்,
சுப்ரமணியன், காளீஸ்வரன், சிதீஷ் உள்ளிட்ட மாநில, மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.