Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சமுதாயத்திற்காக உழைத்த யாதவர்களை அழைக்காமல் திருச்சியில் தமிழ்நாடு யாதவ மகாசபை மாநாடு.நாயுடு சமுதாயத்திற்கு செல்லும் பல லட்சம் வருமானம்.

0

 

தமிழ்நாடு யாதவ மகாசபை மாநாடு என்று ஒரு குழு மட்டும் தன்னைத்தானே முடிவு செய்து தேதி அறிவித்து கொண்டு யாதவர்கள் எல்லோரையும் நாங்கள் அழைத்தோம் என்று பச்சை பொய் விளம்பரம் செய்து வரும் சுயநல கூட்டத்திற்கு அன்பான கீழ்கண்டவாறு கேள்விகள் முடிந்தால் பதில் கூறு.

1.ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன் யாதவ சமுதாயத்தின் அடையாளமாக இருப்பவர் இன்றைய சமுதாய மூத்த தலைவர் அவரை உரிய மறியாதையோடு அழைக்கவில்லை.

2. கே.எஸ்.அழகிரி யாதவ சமுதாய மூத்த தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவராக இருப்பவர் அவரையும் அழைக்கவில்லை.

3. எல்.நந்தகோபால் யாதவ் தமிழ்நாடு யாதவ அறகட்டளை தலைவர் முன்னாள் தலைவர் இலட்சுமணபிள்ளையின் மகன் அவரும் இந்த சமுதாயத்திற்காக பாடுபட்டுள்ளார் அவர்களையும் அழைக்கவில்லை.

4. எம்.வி.சேகர் யாதவ்,தமிழ்நாடு யாதவ மகா சபைக்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்பணித்து அனைத்து தலைவர்களுடன் இணக்கமாக இருந்து சமுதாய பணி செய்துவருபவர் சங்கச் சட்ட ரீதியான மகாசபையில் மாநில துணைத் தலைவராகவும் மற்றும் சமுதாயத்தின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துரைக்க இனமானத்தோடு நமக்கான அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து பத்து ஆண்டுகளாக நடத்திவரும் கோகுல மக்கள் கட்சி தலைவர் அவர்களை கர்ட்டசிக்கு கூட அழைக்கவில்லை.

5. தி.தேவநாதன் யாதவ் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை நடத்தும் அவரும் யாதவ மக்களின் கோரிக்கையை முன் வைத்து பேசுகிறார் அவரையும் முறையாக அழைக்கவில்லை.

6. வழக்கறிஞர் டி.இராஜகோபால் யாதவ் ஐக்கிய ஜனதாதளம் மாநில தலைவர் யாதவ சமுதாயத்திற்கு பாடுபட்டவர் அவருக்கும் அழைப்பு இல்லை.

7.பாரதராஜா யாதவ் , திருச்சியில் சமுதாய மக்களின் பாதுகாவலராக இருந்து செயல்படுகிறார் அவரையும் முறையாக அழைக்கவில்லை.

8. கோவை கே.பி.வேல்ராஜ் அழகுமுத்து கோன் பாதுகாப்பு பேரவை என்று வைத்து சமுதாயத்திற்காக பாடுபடுகிறார் அவர்களை அழைக்கவில்லை.

தாமோதரன் யாதவ், சமாஜ்வாடி மாநில பொறுப்பாளர்.

கவுரிசங்கர் ஆர்ஜேடி மாநில தலைவர்,

லோகநாதன் யாதவ் சமாஜ்வாடி மாநில பொறுப்பாளர்.
எஸ்.பி.சிவபெருமாள் யாதவ் தமிழ்நாடு யாதவ மகாசபை மூத்த நிர்வாகி அழைக்கவில்லை

வழக்கறிஞர் சத்தியம் சரவணன், ஆடு வளப்போர் சங்கம் அழைக்கவில்லை

கேப்டன் இராஜன் யாதவர் தென்மண்டல பேரவை.அழைக்கவில்லை இப்படி பல்வேறு அமைப்பு மற்றும் தமிழ் நாடு யாதவ மகாசபை மூத்த நிர்வாகிகளான சேப்பாக்கம் நாராயணசாமி,கோதண்டராமன், வைகை மணி, எஞ்ஜினியர் எம்.சண்முகம்,மீஞ்சூர் எம்.பாபு யாதவ்,

காஞ்சி.ஆனந்தன், அ.அரங்கநாதன் யாதவ்,மோகனரங்கம் யாதவ், சுப்ரமணியம் யாதவ், எஸ்.துரை யாதவ், என்.அர்சுணன் யாதவ், எம்.இ.அரிகிருஷ்ணன் யாதவ், எம்.ஜி.தயாளன் யாதவ்,டி.எஸ்.சங்கர் யாதவ், எஸ்.பாலு யாதவ், கே.கபாலி யாதவ்,ஜி.வெங்கடேசன் யாதவ், எம்.சி.சரவணன் யாதவ்,காஞ்சிவயல் இராஜி யாதவ், வி.சரவணன் யாதவ், எல்லப்பன் யாதவ்,பம்மல் புண்ணியக்கோட்டி யாதவ்,இன்னும் பட்டியல் நீண்டு கொண்டே போகும் இது போன்ற ஏராளமான யாதவர்களை தகவலுக்கு கூட அழைக்கவில்லை இப்படி இவர்கள் அவசரகதியில் இன்று அரசாங்கத்திடம் அனுமதி கிடைக்காமல் அல்லல் படுகிறார்கள்.

இப்போது வந்து மந்திரியை பார்க்கிறோம் என்றால் எந்த வகையில் நியாயம்….?

அனைவரையும் கலந்தேன் என்று நாகூசாமல் பொய்யாக சொல்கிறார்கள் அப்பட்டமான நாடகத்தை செயல்படுத்துகிறார்கள்.

தமிழ்நாடு யாதவ மகாசபை முறையாக சட்டதிட்ட விதியோடு செயல் பட முடியாத நிலையில் உள்ளது என்பது பல ஆண்டுகளாக அனைவரும் அறிந்ததே…!

அப்படி இருக்கும் போது அதனுடைய நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து சட்ட சிக்கலை போக்கி முறைப்படுத்தாமல் அவசரகதியில் தானே தலைவர் என்று அறிவிக்க வேண்டும் என்று தனக்கு வேண்டபட்டவர்களை மட்டும் வைத்து கொண்டு தன்னை தானே தலைவர் என்று அறிவித்து கொண்டு சுய விளம்பரங்கள் செய்து கொண்ட போது தெரியவில்லையா…? யார் யார் சமுதாயத்திற்கு உழைத்தவர்கள் என்று?

இன்று மாநாடு நடத்த யாதவர் சமுதாயத்திற்கு பாடுபட்ட தலைவர்களை மதித்து அனைவரின் ஒப்புதலோடு சங்கத்தின் தலைவர் பொறுப்புக்கு வரவேண்டும் என்று அன்று முடிவு செய்திருந்தால் இன்று இந்த பிரிவினை நமது சமுதாயத்தில் வந்து இருக்காது.

ஆனால் அன்று நல்லவர்களின் பேச்சை கேட்காமல் சுயநல கூட்டம் காட்டும் பாதையை பின் தொடர்ந்ததால் இன்று சமுதாய மக்களிடையே பெரும் பிளவு ஏற்பட்டு நிற்கிறது.

14-12-2022-அன்று மாவட்ட பதிவுத்துறை பதிவாளரின் ஆணையை மதித்து அனைவருக்கும் அழைப்பு விடுத்து முறையான பொதுக்குழு மூலம் தேர்வாகி இருந்தால் இன்று யாதவர்களுக்குள் எந்த மோதலும் ஏற்பட்டு இருக்காது.

அன்று பதவி மோகத்தால் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் அரை வேக்காட்டு தனமாக தவறான முடிவுகள் எடுத்து யாதவர் சமுதாய மக்கள் கீழ் மட்டம் வரை ஒருவற்கொருவர் மோதல் போக்கை உருவாக்கிய உங்களை அந்த கண்ணபரமாத்மாவே வந்தாலும் மண்ணிக்க மாட்டார்…..!

ஏன் என்றால் நீங்கள் படித்தவர்கள்,நல்லது கெட்டது தெரிந்தவர்கள் மகாசபையின் சட்ட சிக்கல்களை நன்கு அறிந்தவர்கள் அப்பேற்பட்டவர்கள் சாதாரன சமுதாய மக்களை மோத விடலாமா….?
இது தர்மமா…? நியாயமா…? பணம் இருக்கிறது என்றால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? யாதவர் சமுதாயத்திற்கு என்று ஒரு தர்மம் இல்லையா…?

இனியாகிலும் சிந்திப்போம் செயல்படுவோம் பொறுமையாக அனைவரையும் அரவனைத்து செயல்பட முடிவு எடுப்போம். நிதானமாக அனைத்து தரப்பு மக்களும் விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைவரையும் அழைத்து பேசி சுமூக முடிவினை எடுக்க முற்படுவோம் வாரீர்.என பாரதிராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

இது மட்டுமில்லாமல் மாநாடு குறித்த விளம்பரங்களை தனது சமுதாயத்தில் உள்ள யாதவர்களுக்கு அல்லது யாதவர்கள் மூலமாக அளிக்காமல் தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பு மாநில செயலாளர் கோவிந்தராஜுலு என்ற நாயுடுவின் முலம் பத்திரிக்கை விளம்பரங்கள் வழங்கப்பட்டுள்ளது.ராமச்சந்திரன் யாதவ் என்பவரிடம் விளம்பரம் குறித்து கேட்டபோது கோவிந்தராஜுலு நாயுடு எந்தெந்த பத்திரிக்கைக்கு தாரா சொல்லி இருக்கிறாரோ அவர்களுக்கு மட்டுமே நாங்கள் விளம்பரம் தருவோம் என கூறியுள்ளார்.இதன் மூலம் பல லட்ச ரூபாய் வருமானம் நாயுடு சமுதாயத்திற்கு செல்கிறது.

Leave A Reply

Your email address will not be published.