Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உடல் உறுப்பு தானம் அளித்த வாலிபரின் குடும்பத்தினரு க்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு.

0

மக்கள் சக்தி இயக்க சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு உடல் உறுப்புத்தானம் செய்த குடும்பத்தினர்கள் கெளவரப்படுத்த பட்டார்கள்.

சென்ற மாதம் ஜுலை 14ம் தேதி சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த 28 வயதான சமயபுரம் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எம். கணேசன் அவர்களது உடல் உறுப்புகளான இரண்டு சிறுநீரகங்கள் , இரண்டு கண்கள், நுரையீரல், இதயம், கல்லீரல், ஆகிய ஏழு உறுப்புகளை கொடையாக வழங்கிய கணேசனின் பெற்றோர்களான
தியாகிகள் செல்லம்மாள் , மணிவண்ணன், சகோதரர் உலகஒளி ஆகியோரை முளைச்சாவு அடைந்த நேரத்தில் எடுத்த உறுதிப்பாட்டிற்கும் , மன உறுதிக்கும், தியாகிகள் வாங்கித் தந்த விடுதலைத் திருநாளில் அவர்களை செந்தண்ணீர்புரம் உயர்நிலைப்பள்ளிக்கு அழைத்து, தலைமையாசிரியர் எழிலரசி, மாமன்ற உறுப்பினர் சுரேஷ். மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் வெ.இரா.சந்திரசேகர், கே.சி. நீலமேகம், இரா.இளங்கோ, ஆர்.கே.ராஜா, ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் , மாணவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பொன்னாடை போர்த்தி , பாராட்டியதுடன் , நன்றி தெரிவிக்கும் முகமாக அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் கைதட்டி நன்றியை காணிக்கையாக்கினார்கள் .

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க சார்பில் இது போல உடல் உறுப்பு தானம் செய்த 11 குடும்பத்தினர்களுக்கு , ஏழை நிலை உள்ளவர்களுக்கு பணத்துடன், பாராட்டு சான்றிதழ், பொன்னாடை கொடுத்து கெளவரப்படுத்தி இருக்கிறார்கள்

மேலும் இதன் நினைவாக செந்தண்ணீர்புரம் பகுதியில் மக்கள் சக்தி இயக்க வெ.இரா.சந்திரசேகர் தலைமையில் தியாகி மணிவண்ணன், மரக்கன்று நடும் நிகழ்வு நடந்தது.

Leave A Reply

Your email address will not be published.